Published : 07 Nov 2019 08:33 PM
Last Updated : 07 Nov 2019 08:33 PM

50 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலா வாகனம்: கொடைக்கானலில் விபத்து

கொடைக்கானலிலிருந்து குஜராத் மாநிலம் சூரத் நகரை நோக்கிச் சென்ற சுற்றுலா வேன், 2வது கொண்டையூசி வளைவில் நிலைதடுமாறி 50 அடிப்பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பெண் ஒருவர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழனி- கொடைக்கானல் சாலையில் இரண்டாவது கொண்டையூசி வளைவில் கொடைக்கானலில் சுற்றுலா முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த வேனில் 40 பயணிகள் இருந்தனர்.

அப்போது வளைவில் ஓட்டுநர் கண் அசந்ததன் காரணமாக பேருந்து திசை மாரி 50 அடிப்பள்ளத்தில் கவிழ்ந்து 2 மரங்களுக்கு இடையே பிடிக்கப்பட்ட நிலையில் அகப்பட்டுக் கொண்டது வேன். இந்தப் பிடி தளர்ந்தது என்றால் வேன் இன்னும் பல அடிகள் கீழே செல்லும் அபாயம் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

40 பேரில் அனைவரும் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் டிரைவர் மற்றும் ஒரு குழந்தை வேனில் சிக்கியுள்ளதாக தனியார் தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன. இதில் ட்ரைவரை தீயணைப்புத் துறையினர் காயத்துடன் மீட்டுள்ளனர். குழந்தையை மீட்கும் பணிகள் நடைபெறுவதாகவும் பெண் ஒருவர் இந்த விபத்தில் பலியானதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x