Published : 07 Nov 2019 06:30 PM
Last Updated : 07 Nov 2019 06:30 PM

தமிழகத்தில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவல்?- உஷார் நிலையில் போலீஸ்

உதகமண்டலம், பிடிஐ

தமிழத்திற்குள் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் தீவிர சோதனையில் இறங்கியுள்ளனர். . வட இந்தியாவைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கி பயிற்சிகளில் ஈடுபடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களை கேரள போலீஸார் கைப்பற்றியுள்ளதாககாவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தமிழகக் காவல்துறை கூறியுள்ளதாவது:

மாவோயிஸ்டுகள் தமிழகத்திற்குள் நுழைந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. எனவே சோதனைச் சாவடிகள், சிறப்பு பணிக்குழு ஊழியர் முகாம்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள காவல்துறையினர் ஒரு பென் ட்ரைவை கைப்பற்றியுள்ளனர். ஏராளமான மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுட பயிற்சி பெற்றிருப்பதை அதில் உள்ள வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன. பயிற்சியாளர்களில் பெரும்பாலோர் இந்தி மற்றும் சத்தீஸ்கரி மொழியில் பேசுகிறார்கள் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மாத இறுதியில் பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடி காடுகளில் நடந்ததாகக் கூறப்படும் என்கவுன்ட்டரில் நான்கு மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

என்கவுண்டரின் போது ஒன்று அல்லது இரண்டு பயிற்சியாளர்கள் புல்லட் காயம் அடைந்ததாகவும், அங்கிருந்து தப்பியோடிய அவர்கள் இரு மாநிலங்களின் எல்லைக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்காக தமிழகத்திற்குள் பதுங்க முயற்சித்ததாகவும் தகவல்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து, தமிழகக் காடுகளுக்குள் தேடுதல் வேட்டைகள் தீவிரமடைந்துள்ளன, மேலும் நடுகனி, சோலாடி, நம்பியர்குன்னு குடலூர் மற்றும் பட்டவயல் ஆகிய இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லி மற்றும் பந்தலூர் முகாம்களில் உள்ள சிறப்பு பணிக்குழு ஊழியர்களும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

இவ்வாறு தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x