Published : 07 Nov 2019 02:28 PM
Last Updated : 07 Nov 2019 02:28 PM

காலையில் அமைச்சருடன் விழாவில் பங்கேற்றார்; மாலையில் திருச்சிக்கு மாறுதல்: மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ இடமாற்றம் - மாநில சுகாதாரத்துறை நடவடிக்கையின் பின்னணி என்ன?

மதுரை

மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று காலை நடந்த ‘பெட் ஸ்கேன்’ தொடக்க விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன் கலந்துகொண்ட ‘டீன்’ வனிதா மாலையில் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஓய்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை இருக்கும் மூத்த பேராசிரியர்களே ‘டீன்’களாக நியமிக்கப்படுவர். அவர்கள் நிர்வாகப் பொறுப்புகளில் எந்தச் சர்ச்சையிலும் சிக்காதவரை இடமாற்றமின்றி அதே மருத்துவ மனையில் ஓய்வு பெறுவர்.

அதன்படி மதுரை அரசு மருத்துவமனையில் ‘டீன்’களாக இருந்த வைரமுத்துராஜூ, மருதுபாண்டியன் ஆகியோர் சர்ச்சையிலும் சிக்காததால் இதே மருத்துவமனையில் ஓய்வு பெற் றனர். மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ ஆக வனிதா இருந்து வந்தார். மருத்துவர்களிடமும், ஊழியர்களிடமும் இவர் கனிவாக நடந்து கொள்வதில்லை என்றும், அவர்கள் கோரிக்கைகளை காது கொடுத்துக் கேட்பதில்லை என்றும், மருத்துவமனையின் பல்வேறு கோப்புகளை உடனுக்குடன் கையெழுத்துப் போடாமல் கிடப்பில் போட்டதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், யாரும் இவரை எளிதில் அணுக முடியவில்லை என்றும், இவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. மொத்தத்தில் இவரது நிர்வாகப் பணிகளில் சுகாதாரத் துறை அமைச்சருக்கும், உயரதிகா ரிகளுக்கும் திருப்தி இல்லை என்றும், இவரும் மதுரையில் தொடர விருப்பமில்லாமல் சென் னைக்கு இடமாற்றம் கேட்டு வந்த தாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை மதுரை அரசு மருத்துவமனையில் ‘பெட் ஸ்கேன்’ திறப்பு விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பங் கேற்றார். இந்த விழாவில் அவருடன் ‘டீன்’ வனிதாவும் கலந்து கொண்டார். மாலையில் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ‘டீன்’ ஆக அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். மதுரை அரசு மருத்துவமனை பொது மருத்துவத் துறைப் பேராசி ரியாக இருந்த சங்குமணி, புதிய ‘டீன்’ ஆக நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

‘டீன் வனிதா உள்ளிட்ட 4 ‘டீன்’கள் இடமாற்றம் கடந்த 2 நாட்களுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு. ஆனால், இன்று (நேற்று) மாலைதான் அந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது. மதுரையில் பேராசிரியராக இருந்த இருதய நிபுணர் ரத்தினவேல் சிவகங்கைக்கு புதிய ‘டீன்’ ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், நீலகிரி உள்ளிட்ட 6 புது மருத்துவக்கல்லூரிகளுக்கு ‘டீன்’ அந்தஸ்தில் சிறப்பு அதிகாரிகளாக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி, செங்கல்பட்டு, சிவ கங்கை உள்ளிட்ட பிற மருத் துவக்கல்லூரி காலியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. சர்ச்சை, குற்றச்சாட்டு அடிப்படையில் வனிதா இடமாற்றம் செய்யப் படவில்லை. ஆனால், அவர் விரும்பிய இடத்துக்கு இடமாற்றம் கிடைக்கவில்லை. அவருடன், சேலம், கன்னியாகுமரி, தஞ்சாவூர் ஆகிய 4 ‘டீன்’கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது மதுரை அரசு மருத்து வமனை ‘டீன்’ ஆக நியமிக் கப்பட்டுள்ள சங்குமணி, பல மட்டங்களில் செல்வாக்கு மிக்கவர். அவருக்காகவே ‘டீன்’ வனிதா இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது தமிழக சுகாதாரத் துறையில் நடக்கும் நிகழ்வுகள் வெளிப்படையாக இல்லை. அனைத்தும் மர்மமாகவும், திடீர் நடவடிக்கைகளுமாக உள்ளன. அதனால், ‘டீன்’ இடமாற்றத்தில் எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை, என்று கூறினர்.

‘டீன்’ வனிதாவிடம் அவரது கருத்தை அறிய பலமுறை தொடர்பு கொண்டும் வழக்கம்போல் அவர் அழைப்பை ஏற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x