

மதுரை
உள்ளாட்சித் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று(நவ.7) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், வெங்காய விலையுயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "வெங்காய விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பதுக்கலும் அதிகரித்துள்ளது. இதனால், விலை இன்னும் உயரலாம். அரசு இதனைக் கட்டுப்படுத்த வெங்காயம் இறக்குமதி செய்யலாம்" என்றார்.
திருவள்ளுவர் சிலை சர்ச்சை குறித்த கேள்விக்கு, "இது தொடர்பாக ஏற்கெனவே அறிக்கை கொடுத்துள்ளேன்.
திருவள்ளுவருக்கு கிறிஸ்தவர்கள் சிலுவை அணிவித்தும் இஸ்லாமிய சகோதரர்கள் குல்லா வைத்தும் தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்காமல் இதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
ஆன்லைன் வர்ததகத்தினால் பாதிப்பு என்பது உண்மைதான். டிஜிட்டல் இந்தியா திட்டம் என்று போய் கொண்டிருக்கிறோம். வீட்டில் உட்கார்ந்து பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம். சினிமா டிக்கெட்டை என ஆன்லைன் மூலம் வர்தகம் நடைபெறுகிறது. இதனால் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு செயல்பட வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் சமுத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ளதால் அது பற்றி பேசி முடிவெடுக்கப்படும்" எனக் கூறினார்.