பொது விநியோக திட்டம் கணினிமயமாக்கம்: சென்னை, திருச்சியில் 39 கடைகளில் பரிசோதனை

பொது விநியோக திட்டம் கணினிமயமாக்கம்: சென்னை, திருச்சியில் 39 கடைகளில் பரிசோதனை
Updated on
1 min read

சென்னை மற்றும் திருச்சியில் 39 ரேஷன் கடைகளில், பொது விநியோக திட்டத்தை முழுமையாக கணினிமயமாக்கும் பணிகள் சோதிக்கப்பட்டு வருவதாக உண வுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை செயல் பாடுகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் காமராஜ் கூறியதாவது:

மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையிடம் இருந்து தேசிய மக்கள் தொகை பதிவேடு அடிப்படையில் தமிழகத்தில் குடிமக்களின் விவரங்கள் அடங் கிய ஆதார் எண் உள்ளிட்ட கணினி தகவல் தொகுப்பு பெற வேண்டியுள்ளது.

தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான உடற் கூறு பதிவு செய்யும் பணிகள் 83 சதவீதம் மட்டுமே முடிக்கப் பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்ட சேவை களை முழுமையாக கணினிமய மாக்க, அதற்கென தயாரிக்கப்பட் டுள்ள சிறப்பு மென்பொருள், திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனம் மூலம், முதல்கட்டமாக சென்னை மாநகர் மற்றும் திருச்சியில் 39 நியாய விலைக் கடைகளில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 4 மாதங்களுக்கு போதுமான புழுங்கல் மற்றும் பச்சரிசி கையிருப்பில் உள்ளது. மக்கள் குறைதீர் முகாம்களில் 3.95 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, 3.78 லட்சம் மனுக்கள் அன்றே தீர்வு செய்யப்பட்டுள்ளன.

4 லட்சத்து 12 ஆயிரத்து 978 அட்டைகள் போலி என கண்டறியப் பட்டு ரத்து செய்யப் பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டைகளை 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in