புதுச்சேரியில் சாலையோரத்தில் பிச்சையெடுக்கும் மூதாட்டியிடம் 3 வங்கிக்கணக்குகள்; லட்சக்கணக்கில் பணம்

மூதாட்டி பருவதாம்பாளிடம் இருந்த பணம்
மூதாட்டி பருவதாம்பாளிடம் இருந்த பணம்
Updated on
1 min read

புதுச்சேரி

புதுச்சேரி சாலையோரத்தில் இருந்த பிச்சை எடுக்கும் மூதாட்டியை அப்புறப்படுத்தும் போது அவரிடமிருந்து 18 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வங்கிக் கணக்கில் 1 லட்சத்து 75,000 ருபாய் வைத்திருந்தது தெரியவந்தது .

புதுச்சேரி காந்தி வீதியில் மிகவும் பழமையான ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை இன்று நகராட்சி மற்றும் கோயில் நிர்வாத்தினர் அகற்றினர். அப்போது அதே கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த வயதான மூதாட்டியையும் அப்புறப்படுத்த முயன்றனர்.

மேலும் அவர் வைத்திருந்த பழைய துணி மூட்டையை குப்பையில் வீச முயன்றபோது அதில் இருந்து சில்லறைக் காசு, ரூபாய் நோட்டுகள் மொத்தமாக கீழே சிதறி விழுந்தன. இதனைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மூதாட்டி பருவதாம்பாளிடம் இருந்த பணம்

மேலும் இதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர் அந்த மூதாட்டியிடம் இருந்த பணத்தை எண்ணும்போது அதில் 18 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதேபோல் அவர் வைத்து இருந்த 3 வங்கிக் கணக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 1.70 லட்சம் வரவு வைத்து இருந்தது தெரியவந்தது. இதேபோல் இரண்டு சவரன் தங்கச் சங்கிலி கழுத்திலும், பையில் தங்கக் காதணியும் தங்க மோதிரமும் வைத்திருந்தார்.

மூதாட்டியிடம் விசாரித்தபோது அவரது பெயர் பருவதாம்பாள் (94) என்பதும் அவரது சொந்த ஊர் கள்ளக்குறிச்சி என்பதும் தெரியவந்தது. மேலும் தனது கணவர் இறந்ததைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள தனது உறவினர்கள் வீட்டில் வசித்து வந்த நிலையில் அங்கிருந்து வெளியே வந்து கடந்த சில ஆண்டுகளாக கோயிலில் பிச்சை எடுப்பதாகத் தகவல் தெரிவித்தார்.

மேலும் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முதியோர் உதவித்தொகை மற்றும் பிச்சை எடுத்ததில் சேர்த்து வைத்த பணம் என்றும் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகடை போலீஸார் மூதாட்டியை மீட்டு முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மூதாட்டியிடம் கேட்டதற்கு, "ஒரு ஒரு ரூபாயா சேர்த்து வைத்த பணம் பா," என்றார்.

சாம்ராஜ் ஜாய்சன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in