

சென்னை
மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பாஜகவில் இணைந்தனர்.
இதுதொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் ஸ்ரீகாருண்யா மற்றும் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ரவி ஆகியோர் நேற்று (நவ.5) என்னை சந்தித்து தங்களை பா.ஜ.க.வில் இணைத்துகொண்டனர். பிரதமரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தாங்களும் ஈடுபடஉள்ளதாகவும் அவர்கள் கூறினர் என அறிக்கையில் கூறியுள்ளார்.