

சென்னை
நாடுமுழுவதும் டெங்கு காய்ச்சலால் 75,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 4,500 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில், “இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை நாடுமுழுவதும் பன்றிக் காய்ச்சலால் சுமார் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 1,201 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2,266 பேர் பாதிக்கப்பட்டு 239 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் 208 பேரும், மத்திய பிரதேசத்தில் 165 பேரும், குஜராத்தில் 151 பேரும் இறந்துள்ளனர். தமிழகத்தில் 542 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழக எல்லைப் பகுதிகளில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.