Published : 06 Nov 2019 09:20 AM
Last Updated : 06 Nov 2019 09:20 AM

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு ரூ.1 கோடியே 67 லட்சம் ‘தஸ்திக்’ தொகை: செயல் அலுவலரிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார்

சென்னை

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு 2001-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை வழங்கப்பட வேண்டிய ‘தஸ்திக்’ தொகை ரூ.1 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரத்து 225-க்கான காசோலையை முதல்வர் பழனிசாமி கோயில் செயல் அலுவலரிடம் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு 2001-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள ‘தஸ்திக்’ தொகை வழங்குவது தொடர்பாக, நில நிர்வாக ஆணையர் தலை மையில் இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள், கன்னி யாகுமரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், திருவனந்த புரம் பத்மநாப சுவாமி கோயில் நிர்வாக அலுவலர் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் ரூ.1 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரத்து 225 நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று கணக்கிடப் பட்டது. தொடர்ந்து இத்தொ கையை வழங்குவதற்கான அர சாணை கடந்த அக்.18-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு ‘தஸ்திக்’ நிலுவைத் தொகையாக ரூ.1 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரத்து 225-க்கான காசோ லையை நேற்று தலைமைச் செயல கத்தில் முதல்வர் பழனிசாமி அக் கோயிலின் செயல் அலுவலரிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் கே.சண்முகம். நில நிர்வாக இணை ஆணையர் கே.கற்பகம் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

தஸ்திக் தொகை ஏன்?

கோயில் நிலத்தை அரசு கையகப்படுத்தியதற்காக வழங்கப்படும் ஈட்டுத்தொகையே ‘தஸ்திக் தொகை’ அல்லது ‘தஸ்திக் படி’ என்று அழைக்கப்படுகிறது.

கடந்த 1956-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் இருந்து குமரி மாவட் டம் பிரிக்கப்பட்டு, தமிழகத்துடன் இணைந்தது. அப்போது கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயி லுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் திருவட்டார் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்தன.

இந்த நிலங்களை கடந்த 1964-ம் ஆண்டு தமிழக அரசு கையகப்படுத்தியது. அப்போது ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை அதற்கு ஈடாக (தஸ்திக் தொகை) பத்மநாப சுவாமி கோயிலுக்கு வழங்க தமிழக அரசு தீர்மானித்தது. அதன் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த தஸ்திக் தொகை கடந்த 2001-ம் ஆண்டு முதல் வழங் கப்படவில்லை. இத்தொகையை வழங்கும்படி பத்மநாப சுவாமி கோயில் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் வந்தது.

அதே நேரம் அக்கோயில் தரப்பில் இருந்து அதிக தொகை கோரப்பட்டது. அதன்பின் தமிழக அரசு தரப்பில் கோயில் நிர்வாகத்திடம் பேசி ரூ.1 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரத்து 225 தர முடிவெடுக்கப்பட்டது. இந்தத் தொகையே தற்போது வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x