

சென்னை
திருவொற்றியூர், தண்டையார்ப் பேட்டை, காசிமேடு உள்ளிட்ட பகுதி களில் மாஞ்சாநூல் விற்பனை செய்த, காற்றாடி பறக்கவிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை கொருக்குப்பேட்டை யைச் சேர்ந்த கோபால், தன் மனைவி மற்றும் 2 வயது குழந்தை அபிநவ் உடன் கடந்த 3-ம் தேதி வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் அபிநவ் கழுத்தை அறுத்தது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாஞ்சா நூல் தயாரிப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆய்வாளர் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் மாஞ்சா நூல் தயாரித்து விற்பவர்கள், காற்றாடி கள் விடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
காசிமேடு காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீ ஸார் கண்காணிப்பில் ஈடுபட்டி ருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவல்பேரில் காசிமேடு, ஏ.ஜெ.காலனி 2-வது தெருவில் உள்ள பெட்டிக்கடையில் காற்றாடிகள் விற்பது கண்டுபிடிக் கப்பட்டது. கடையின் உரிமை யாளர் சார்லஸ் கைது செய் யப்பட்டார். அவரிடம் இருந்து 8 காற்றாடிகள் பறிமுதல் செய்யப் பட்டன.
மாஞ்சா நூல் பறிமுதல்
தலைமைச் செயலக காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் நடந்த ஆய்வில், புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம் பகுதியில் ஒரு வீட்டில் மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகள் வைத்திருந்த கர்ணா, என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து 4 காற்றாடிகள், 13 மாஞ்சா நூல் சுற்றப்பட்ட லோட்டாய்கள் பறிமுதல் செய் யப்பட்டன.
அதேபோல், தண்டயார்ப் பேட்டை பகுதியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி விட்ட செல்வ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த கிரண், வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்த சூர்யா, விக்னேஷ், ராகுல் ஆகியோரை தண்டை யார்ப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 காற்றாடிகள், 3 மாஞ்சா நூல் சுற்றப்பட்ட லோட்டாய்கள் பறி முதல் செய்யப்பட்டன.
போலீஸார் ஆய்வு
திருவொற்றியூர் அடுத்த திருச்சி னாங்குப்பம் பகுதியில் மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்ட அப்பகுதியைச் சேர்ந்த கிரி என்ற முகேஷ், திரு வொற்றியூர் சாத்துமாநகரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகி யோரை கைது செய்தனர். அவர் களிடம் இருந்து 2 காற்றாடிகள் மற்றும் 2 மாஞ்சா நூல் சுற்றப்பட்ட லோட்டாய்கள் பறிமுதல் செய் யப்பட்டன. மேலும், தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீஸார் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.