தமிழ்நாட்டில் காற்று மாசு அச்சுறுத்தல் இல்லை: அரசு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் உறுதி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

திருச்சி

தமிழ்நாட்டில் காற்று மாசு அச்சுறுத்தல் இல்லை என்று அரசு முதன்மைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று நடைபெற்ற பேரிடர் விழிப்புணர்வு முகாமைதொடங்கிவைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாட்டில் காற்று மாசுபட்டுள்ளதா என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தமிழ்நாட்டில் காற்று மாசுபாடு அச்சுறுத்தல் இல்லை. எனவே, வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். வயலில் அறுவடை முடிந்த பிறகு தீயிட்டு கொளுத்தும் வழக்கம் தமிழ்நாட்டில் இல்லை.

விபத்து மற்றும் பேரிடர்களில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.

விபத்து அபாயங்களை தவிர்ப்பது மற்றும் அவசர, ஆபத்து, பேரிடர் நேரங்களில் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க எப்படி செயல்பட வேண்டும், எப்படி செயல்படக் கூடாது எனபது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

நடுக்காட்டுப்பட்டியில் குழந்தையை மீட்கும் பணியில் பல்வேறுநவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டன. தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத் துறையினரிடம் உள்ள கருவிகள் மட்டுமல்லாமல் எவரேனும் ஏதாவது புதிய கருவிகளைப் பரிந்துரைத்தாலும் அதையும் பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது. வித்தியாசமான முயற்சிகள் வரப்பெற்றாலும், அவற்றையும் செயல்படுத்த முயற்சி செய்யப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in