

கே.சுரேஷ்
புதுக்கோட்டை
தமிழகத்திலேயே முதல் முறையாக புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் உயர்தர வசதிகளுடன் தமிழக முதல்வரின் காப்பீடு திட்ட வார்டுகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் தமிழக முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
அதில், மற்ற அரசு மருத்துவமனை களைவிட புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே உள்ள 2 வார்டுகளிலும் குளிர் சாதன வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட வசதிகள் ஏற் படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய முன்மாதிரி முயற்சியானது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல் வர் அழ.மீனாட்சி சுந்தரம், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்துத் துறை மருத்துவர்களும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்ப தில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல் படுகின்றனர். மற்ற அரசு மருத்துவமனை களைப் போன்று இம்மருத்துவமனையிலும் தமிழக முதல்வரின் காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கான வசதி உள்ளது.
அதன்படி, உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுவோருக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கரின் உத்தரவைத் தொடர்ந்து ஏராள மான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என இருவேறு வார்டுகளிலும் தங்கியுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கி இருப்பவர்களுக்கு என வசதியான அறை, அறை முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும் வகையில் பெரிய அளவிலான குளிர்சாதன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், நோயாளியின் படுக்கை அருகி லேயே அவருடன் தங்கி இருப்பவருக்கும் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. உணவு அருந்துவதற்கு என தனித்தனியாக மேஜை வசதி உள்ளது. மேலும், வார்டுக்கு 4 வீதம் 2 வார்டுகளிலும் 8 ஸ்மார்ட் டிவிகள் உள்ளன. மேலும் நூல்கள், நாளிதழ்கள் வாசிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பறையும் உள்ளது.
மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை வைப்பதற்கு, படுக்கைக்கு ஒன்று என பாதுகாப்புப் பெட்டியும் வழங் கப்பட்டுள்ளது. இவ்வார்டுகளை கவனித் துக்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்களு டன் வார்டுகளைப் பராமரிக்கத் தேவை யான துப்புரவுப் பணியாளர்களும் நியமிக் கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத இத்தகைய வசதிகளால் இம்மருத்துவமனையில் தங்கி இருப்போர் மன இறுக்கமின்றி உள்ளனர். இதனால் சிகிச்சைக்கு முழுமையான ஒத் துழைப்பும், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளன என்றார்.