Published : 05 Nov 2019 11:49 AM
Last Updated : 05 Nov 2019 11:49 AM

தாம்பரத்தில் ரூ.85 லட்சத்தில் நூலக கட்டிடம்: சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அடிக்கல் நாட்டினார்

தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில், தாம்பரம் கிளை நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது, கட்டுமான பணியின் வரைபடத்தை காட்டி, சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவிடம் அதிகாரிகள் விளக்கினர்.

தாம்பரம்

தாம்பரம் கிளை நூலகத்துக்கு ரூ.85 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இக்கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா தாம்பரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமை யில் நேற்று நடைபெற்றது.

தாம்பரம் நகராட்சியில், 1957-ம் ஆண்டில் கிளை நூலகம் தொடங் கப்பட்டது. 67 ஆண்டுகளாக பழமைவாய்ந்த வாடகைக் கட்டி டத்தில் இந்த நூலகம் இயங்கி வருகிறது. போதிய இடவசதி, பாதுகாப்பு இல்லாததால் வாசகர் கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து புதிய நூலகக் கட்டிடம் கட்ட தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தமது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அதேபோல் நூலகத் துறை சார்பில் ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நூலக கட்டு மானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நேற்று நடைபெற் றது. இவ்விழாவில், மாவட்ட நூலகர் மந்திரம், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறி யாளர் சொக்கலிங்கம், உதவி பொறியாளர் அருட்செல்வி, தாம் பரம் கிளை நூலகர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

67 ஆண்டுகள் பழமையானது

இதுகுறித்து நூலகர் வெங்க டேசன் கூறும்போது, ‘‘தாம்பரத்தில் நூலகம் தொடங்கப்பட்டு 67 ஆண்டுகள் ஆகின்றன. போதிய இடவசதி இல்லாததால் வாசகர் களின் கோரிக்கையை ஏற்று, புதிய கட்டிடம் கட்ட தாம்பரம் எம்எல்ஏ ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

2 தளங்கள்

நூலகத் துறை சார்பில் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் தரை தளத்துடன் கூடிய 2 தளங்கள் கட்டப்பட உள் ளன. இதில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம், குழந்தைகள் பிரிவு, கணினி பிரிவு, இ-சேவை பிரிவு உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும்’’ என்றார். நூலகக் கட்டிடப் பணிகள் 8 மாதங்களில் முடிக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x