Published : 05 Nov 2019 11:17 AM
Last Updated : 05 Nov 2019 11:17 AM

முக.ஸ்டாலினுக்கு சவால் விட்ட அமைச்சர் உதயகுமாருக்கு திமுக பதில் சவால்: மதுரையில் முற்றும் அரசியல் மோதல்

மதுரை 

மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறன் பதில் சவால் விடுத்துள்ளார்.

உசிலம் பட்டியில் சமீபத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், விக்கிரபாண்டி, நாங்குனேரி தேர்தல் வெற்றி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதை குறிப்பிட்டு அமைச்சர் ஆர்.பி.உத யகுமார் பேசுகையில், ராஜினாமா செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்க தயாரா என தமிழக முதல்வரை சவாலுக்கு அழைக்கிறார் ஸ்டாலின். உசிலம்பட்டி மண்ணிலிருந்து நான் சவால் விடுகிறேன்.

உசிலை.யில் அதிமுகவை எதிர்த்து வெற்றிபெற முடியுமா? தற்போதுள்ள எம்எல்ஏ நீதிபதி யையே வேட்பாளராக நிறுத்துகி றோம். நான்தான் மாவட்டச் செயலாளர், தேர்தல் பொறுப்பாளர். நீதிபதியை வெல்ல முடியுமா? அங்கு நிற்க பயமாக இருந்தால் திருமங்கலத்தில் நான் நிற்கிறேன். அங்கு வந்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? என சவால் விடுத் தார்.

இந்நிலையில், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செய லாளர் எம்.மணிமாறன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உசிலம்பட்டி அதிமுக கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஸ்டாலினை அவதூறாகப் பேசியுள்ளார். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். உசிலம்பட்டி தொகுதியில் எம்எ ல்ஏ.நீதிபதியை ராஜினாமா செய்து போட்டியிட வைக்கிறோம். திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன்,

கட்சியைக் கலைத்துவிடுகிறேன் என்றும், இதை முதல்வர், துணை முதல்வர் என யாரிடமும் கேட்காமல் துணிச்சலுடன் சொல்கிறேன் என அமைச்சர் சவால் விடுத்துப் பேசி யுள்ளார்.

பதிலுக்கு நானும் உதயகு மாருக்கு ஒரு சவால் விடுக் கிறேன். இது குறித்து என் கட்சித் தலைவர், நிர்வாகிகள் யாரிடமும் கேட்கவில்லை. உசிலம்பட்டியில் தற்போதைய எம்எல்ஏ. நீதிபதியை நிறுத்துங்கள்.

திருமங்கலம் தொகுதியில் உதயகுமாரே போட்டியிடட்டும். நாங்கள் திமுகவின் கடைநிலைத் தொண்டர்களை நிறுத்துகிறோம். நீதிபதியோ, நீங்களோ வென்று விட்டால் ஒட்டுமொத்த திமுக தொண்டர்களும் நீங்கள் சொல் வதைக் கேட்கிறோம்.

வருவாய்த்துறையை கைவசம் வைத்துள்ள அமைச்சர் தனது தொகுதிக்கு அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு வழங்குதல் என எதையும் செய்யவில்லை. அப்படிச் செய்திருந்தால் பட்டியலிடட்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த முதியோர் உத வித்தொகை பெற்றவர்களில் பாதிப்பேரை நீக்கிவிட்டனர்.

விதவைச் சான்றிதழ் கேட்ட ஒருவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர் அவரது துறை அதி காரிகள், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x