

திண்டுக்கல்
தொடர் மழையால் சின்ன வெங் காயம் பாதிப்புக்குள் ளாவதால் வரத்து குறைந்து விலை அதிகரிக் கத் தொடங்கி உள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.60-க்கு விற்றது. மழைக் காலம் முடியும் வரை படிப்படியாக விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் உள்ள வெங் காயச் சந்தை திங்கள்கிழமை, புதன் கிழமை, வெள்ளிக்கி ழமை களில் செயல்படுகிறது. பிற மாவட்டங்களில் உற்பத்தியாகும் வெங்காயம் லாரிகளில் இங்கு மொத்தமாக விற்பனைகக்கு கொண்டு வரப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.
சந்தையில் வெவ்வேறு ரகங்க ளாகத் தரம் பிரித்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப் படுகிறது.
வட மாநிலங்களில் பெய்த மழை யால், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெரிய வெங்காயத்தின் விலை சின்ன வெங்காயத்தின் விலையை விட கூடுதலாக விற் றது. தற்போது தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பர வலாகப் பெய்து வருவதால், சின்ன வெங்காய விளைச்சல் பாதிப்புக்குள்ளானது. விளைச்சல் குறைவு காரணமாக வழக்கமாக ஒரு நாளைக்கு ஆறாயிரம் மூட்டைகள் சந்தைக்கு வரும் நிலையில் தற்போது பாதியாகக் குறைந்துள்ளது. இதனால் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. விசேஷ நாட்களாக இருப்பதால் தேவையும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் அதிகபட்சம் கிலோ ரூ. 40-க்கு விற்ற சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ. 60-க்கு விற்கிறது. மழை தொடர்ந்தால் சின்னவெங்காய அறுவடை பாதிக்கப்பட்டு மேலும் விலை உயரும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல, வடமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் சந்தைக்கு பெரிய வெங்காயம் வரத்தும் குறைந்துள்ளது. மழைக்காலம் முடியும் வரை இதே நிலை நீடிக் கும் என வியாபாரிகள் கூறினர்.