விஞ்ஞானியும், சந்திரயான்-1 திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

விஞ்ஞானியும், சந்திரயான்-1 திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
Updated on
1 min read

சென்னை

விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், சந்திரயான்-1 திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரைக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கி சிறப்பிக் கப்பட்டது.

விருதைப் பெற்றுக்கொண்டு மயில்சாமி அண்ணாதுரை நிகழ்த் திய ஏற்புரையில் கூறியதாவது:

தாய் தமிழகத்தை விட்டு புலம் பெயர்ந்து இங்கு வாழும் தமிழர் கள் தங்களுக்குள் எந்த வேறுபாடு இருந்தாலும் தமிழ் என்ற ஒரு குடை யின் கீழ் சேருவது தனி மனிதனாக ஒவ்வொரு தமிழருக்கும், தான் வாழும் தமிழ் சமுதாயத்துக்கும், தமிழுக்கும் சிறப்புச் சேர்ப்பதாக இருக்கும். மஸ்கட் தமிழ்ச் சங்கம் அந்த முனைப்பாட்டில் சிறப்பாகச் செயல்படுவது சிறப்பு.

எனக்கு கொடுக்கப்பட்ட இந்த விருதை, ஒரு தனிப்பட்ட மனிதனாக நான் வாங்கவில்லை. இந்த விழாவை இங்கு அமர்ந்து பார்க்கும் தமிழ் சிறுவர்களின், இளைஞர்களின் மன தில் விதைக்கப்படும் ஒரு விதை யாகவே நான் உணர்கிறேன்.

முத்தமிழை வளர்க்க முயலும் தமிழ் சங்கங்கள் நான்காவது தமிழாய் அறிவியலையும் கையிலெடுப்ப தாக உணர்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விருது நமது மண்ணுக்கு மென் மேலும் உழைக்க உற்சாகம் ஊட்டு வதாக உணர்கிறேன். இவ்வாறு ஏற்புரையில் கூறினார். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மஸ்கட் வாழ் தமிழர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in