

தாம்பரம்
தாம்பரத்தில் திரையரங்க கேன் டீனில் உணவு சாப்பிட்டவரகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற் பட்டதைத் தொடர்ந்து அங்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தாம்பரத்தில் உள்ள வித்யா திரையரங்கில் நேற்று முன்தினம் மாலைக் காட்சி படம் பார்க்க படப்பையைச் சேர்ந்த தீனா மற் றும் சேலையூரைச் சேர்ந்த அருள் ஆனந்தி குடும்பத்தினர் சென் றனர். அங்கிருந்த கேன்டீனில் தின்பண்டம் வாங்கித் தின்றனர். பின்னர் படம் முடிந்து வீடு திரும்பிய நிலையில் அவர்களுக்கு தலை சுற்றல், லேசான மயக்கத்துடன் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட் டுள்ளது. இதற்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். கேன்டீனில் சாப்பிட்ட தரமற்ற உணவுதான் இந்த பாதிப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரி வித்தனர். இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் தரப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக, காஞ்சி புரம் மாவட்ட உணவு பாதுகாப் புத் துறை நியமன அலுவலர் டாக் டர் அனுராதா மற்றும் உணவு ஆய் வாளர்கள் திரையரங்க கேன்டீ னில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தர மில்லாமல், தயாரிப்பு நாள் குறிப் பிடப்படாமல் வைத்திருந்த உண வுப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த 8 லிட்டர் குளிர்பானங்கள், கெட்டுப் போன தின்பண்டங்களை பறி முதல் செய்து அழித்தனர். மேலும் தயாரிப்பு தேதி குறிப்பிடாமல் இருந்த 275 கிலோ பாப்கான் மூலப் பொருட்களின் 11 முட்டைகளை யும் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அனுராதா கூறியதாவது: இந்த திரையரங் கில் தரமற்ற உணவுப் பொருட் களை பறிமுதல் செய்து அழித்துள் ளோம். தொடர்ந்து மற்ற திரையரங் களிலும் ஆய்வு செய்யப்படும். தரமில்லாமல் உணவு தயாரித்து விற்பனை செய்துவது, தயாரிப்பது குறித்து பொதுமக்கள் 9443520332 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தக வல் தெரிவிக்கலாம் என்றார்.