

சென்னை
ஆளுநர் பன்வாரிலாலை முதல்வர் பழனிசாமி சந்தித்து, மாநில சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோ சனை நடத்தினார்.
ஒவ்வொரு மாநில ஆளுநரும் தங்கள் மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து மாதந் தோறும் மத்திய உள்துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இதுதவிர சிறப்பு நிகழ்வுகளின் போதும் மத்திய உள்துறைக்கு அறிக்கை அளிப்பர். அதன்படி, தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோர் அறிக்கை தயாரித்து மாதந்தோறும் ஆளுநருக்கு அனுப்பி வைப்பார்கள். அல்லது நேரில் சென்றும் சமர்ப்பிப்பார்கள். நேரில் செல்லும்போது அவர் களிடம் மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து ஆளுநர் கேட்டறிவார்.
சமீபத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட் டுப்பட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் தமிழகத்தில் பர பரப்பை ஏற்படுத்தியது. இதை யடுத்து, தமிழகம் முழுவதும் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவது தொடர்பாக தமிழக அரசு கடுமையான உத் தரவை பிறப்பித்துள்ளது.
இந்தச் சூழலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி நேற்று மாலை திடீரென சந்தித்துப் பேசினார். கிண்டி ராஜ்பவனில் மாலை 5 முதல் 5.30 மணிவரை நடந்த இந்த சந்திப்பின்போது, தலைமைச் செயலர் கே.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோர் உடனிருந்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின்போது சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதித்ததுடன், அது பற்றி அறிக்கை அளித்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சரவை மாற்றம்?தமிழக அமைச்சரவையில் ஏற் கெனவே இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த பால கிருஷ்ண ரெட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவர் அமைச்சர் பதவியை இழந்ததால் அந்த துறை பள்ளிக்கல்வித் துறை அமைச் சரிடம் கூடுதலாக தரப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் அப்பதவியில் இருந்து நீக்கப் பட்டார். அவர் வகித்துவந்த துறை வருவாய்த்துறை அமைச் சரிடம் கூடுதல் பொறுப்பாக தரப்பட்டுள்ளது. எனவே, 2 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும், அமைச்சரவையில் தற் போதுள்ள சிலர் மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி திடீரென சந்தித்திருப்பது அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.