

காதல் விவகாரத்தில் 3 இளை ஞர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் திண்டிவனம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர்பாக 4 பேரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அருகே தீவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் (25), ராஜீவ் காந்தி (30), டேனியல் (27) இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலை ராஜீவ்காந்தி நகரில் உள்ள ஒரு வயல் வெளியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியது.
இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி நரேந்திர நாயர், வெடிகுண்டு வீசப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். ரோசணை போலீ ஸார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினர். இதில், காதல் விவகாரத்தில் நாட்டு வெடி குண்டு வீசப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளதாக போலீஸார் கூறினர்.
இதுதொடர்பாக அதே கிராமத் தைச் சேர்ந்த பிரவீண், பிரதாப், ஞானவேல், சுதாகர் ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.