

கோவை
வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், தமிழகத்தின் பல இடங்களில் குண்டு வெடிக்கும் எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், கோவை மாநகர காவல்துறையினர் நேற்று மாநகரின் பல்வேறு இடங் களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் உள்ளதா என கண்காணித்தனர். முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் சோதனை நடத் தினர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினரின் கண் காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த சோதனை மற்றும் கண்காணிப்புப் பணி சில மணி நேரம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.