

ச.கார்த்திகேயன்
சென்னை
சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், கூட்டங் களில் தனியார் நிறுவன தின் பண்டங்களுக்கு பதிலாக, மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் திண்பண்டங்களை வழங்க வேண்டும் என்று மகளிர் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.
நகர்ப்புறங்களில் பொருளாதார நிலையில் நலிவடைந்த குடும்பங் களை மேம்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் பங் களிப்புடன் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல் பட்டு வருகிறது. அதன் சென்னை மாநகர இயக்க மேலாண்மை அலகு, மாநகராட்சி நிர்வாகத் தின் கீழ் இயங்குகிறது. அக்குழுக் களின் வாழ்வாதாரத்தை பெருக்க துணைநிற்பதாக மாநகராட்சி நிர்வா கம் கூறிவருகிறது. ஆனால், மகளிர் குழுக்கள் தயாரிக்கும் பொருட் களை மாநகராட்சி நிர்வாகம் வாங் குவது இல்லை என குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சென்னை மாநகர இயக்க மேலாண்மை அலகு சார் பில், மகளிர் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் 2 வாரங்களுக்கு முன்பு நடந்தது. அதில் 500-க் கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள் பங்கேற்றன. நிகழ்ச்சி அரங்குக்கு வெளியே மகளிர் குழுக்கள் தயா ரித்த முறுக்கு, அதிரசம், எலுமிச்சை சாறு, நெல்லிச் சாறு, ரோஸ் மில்க், குளோப் ஜாமூன், கொண்டைக் கடலை, காராமணி சுண்டல் ஆகியவை விற்கப்பட்டன.
அதேநேரம், நிகழ்ச்சியில் பங் கேற்ற மகளிருக்கு பிரபல தனியார் நிறுவன தயாரிப்பு தின்பண்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வாய்ப்பை, மகளிர் குழுக்களுக்கு வழங்கி இருக்கலாம். அதில் கிடைக் கும் வருவாய் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கும் என்று அக்குழுக்கள் தெரிவித்தன.
இதுகுறித்து கேட்டபோது, மாநக ராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 76 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட 6,344 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், சுயதொழில் புரிவதற்காக தலா ரூ.10 ஆயிரம் வீதம் 3,300 குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.3.30 கோடி வழங்கப்பட்டுள்ளது.
குறைந்தது 10 மகளிர் சுயஉதவிக் குழுக்களை இணைத்து ஒரு பகுதி அளவிலான கூட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்புகள் தமிழ்நாடு சங்கப் பதிவு சட்டத்தின் கீழ் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி அளவி லான கூட்டமைப்புகள் பதிவு செய் யப்பட்டு, அவற்றில் 54 பகுதி அள விலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் சுழல் நிதியாக ரூ.27 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தயாரிக்கும் தின்பண்டங் களை மாநகராட்சி கூட்டங்களில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக் கப்படும்.