Published : 03 Nov 2019 08:04 AM
Last Updated : 03 Nov 2019 08:04 AM

‘இந்து தமிழ் திசை' - ‘என்எல்சி இந்தியா' சார்பில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்: நேர்மை என்பது நம் வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும்- நிறைவு விழாவில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஐஜி ராதிகா வலியுறுத்தல்

கடலூர்

‘இந்து தமிழ் திசை' நாளிதழ் மற்றும் ‘என்எல்சி இந்தியா' நிறு வனம் சார்பில் ஊழல் கண் காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு நடத்தப் பட்ட ஓவியப் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு நெய்வேலியில் நேற்று நடந்த நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த ஓவியப்போட்டிகள் சென்னை, புதுச்சேரி, மதுரை, திண்டுக்கல், வேலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, கோயம் புத்தூர், ஈரோடு உட்பட 12 நகரங் களில் நடத்தப்பட்டன. இதில், 524 பள்ளிகளில் இருந்து 10,306 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு லஞ்சம் - ஊழ லுக்கு எதிரான தங்களது சிறப் பான ஓவியங்களை முன்வைத் தனர். இதைத் தொடர்ந்து ஊழல் கண்காணிப்பு வாரத்தின் நிறைவு விழா நெய்வேலியில் நேற்று நடைபெற்றது.

நிகழ்வுக்கு என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் மற்றும் இயக்கு நர் ராகேஷ்குமார் தலைமை தாங் கினார். அவர், பணியாளர்கள் காப்பீட்டுத் தொகை பெறுவதற்கான இணைய முகப்பை வெளியிட்டார். தொடர்ந்து மனிதவள இயக்குநர் விக்ரமன் என்எல்சி பணியாளர்கள் பணி ஓய்வு பயன்கள் கையேட்டை வெளியிட்டார். பின்னர் ராகேஷ் குமார் பேசுகையில், ‘‘மக்களிடம் நமது செயல்கள் நேர்மையாக இருக்க வேண்டும். நாம் செய்வது சரியாக இருக்கிறதா, நேர்மையாக இருக்கிறதா என்று நமக்குள் கேட் டுக் கொள்ள வேண்டும். வெளிப் படையான தன்மையை நாம் மேற் கொண்டால் ஊழலற்ற இந்தி யாவை உருவாக்கலாம்'' என்றார்.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை டிஐஜி ராதிகா பேசு கையில், ‘‘இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேல் நினைவாக இந்த ஊழல் கண்காணிப்பு விழிப் புணர்வு வாரத்தை நாம் கொண் டாடுகிறோம். வரும் 10 ஆண்டு களில் நமது குழந்தைகள் வளர்ச் சியடைந்த இந்தியாவை பார்க்க வேண்டும். அதற்கு ஊழலை ஒழிப் பது அவசியம். அதற்கு வெளிப் படையான தன்மை மிக அவசி யம். என்எல்சி இந்தியா நிறுவனம் நேர்மைக்கு வழிகாட்டியாக முன்னு தாரணமாக திகழ்ந்து வருகிறது. நேர்மை என்பது நம் வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும். நேர் மையை கடைபிடிப்பதில் பெற் றோர் குழந்தைகளுக்கு முன்னுதார ணமாக திகழ வேண்டும்'' என்றார்.

இந்த விழாவில் மின்துறை இயக் குநர் ஷாஷிஜான், விஜிலென்ஸ் தலைமை கண்காணிப்பு அதிகாரி வெங்கடசுப்ரமணியம், ஊழியர் கள், மாணவர்கள் பங்கேற்றனர். விழாவில், ‘இந்து தமிழ் திசை' மற்றும் ‘என்எல்சி இந்தியா' சார்பில் நடத்தப்பட்ட ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி பப் ளிக் பள்ளி மாணவி பவதாரணி (சீனி யர் பிரிவு), ஆம்பூர் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவன் ராகுல் (ஜூனியர் பிரிவு) ஆகியோருக்கு பரி சுகள் சான்றுகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x