Published : 03 Nov 2019 08:02 AM
Last Updated : 03 Nov 2019 08:02 AM

வடபழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்: அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்

வடபழனி ஆண்டவர் கோயிலில் மகா கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். படம்: ம.பிரபு

சென்னை

வடபழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நேற்று வெகு விமரி சையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங் கேற்று அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் மகா கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவது வழக் கம். இதன்படி, இந்த ஆண்டு மகா கந்த சஷ்டி விழா கடந்த 28-ம் தேதி லட்சார்ச்சனையுடன் தொடங் கியது. இதைத் தொடர்ந்து, தினமும் காலை லட்சார்ச்சனையும், மாலை நேரங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விழாவின் முக் கிய நாளான நேற்று நூற்றுக் கணக்கான பக்தர்கள் உச்சிகால லட்சார்ச்சனையில் பங்கேற்றனர். பலர் நீண்ட வரிசையில் நின்று மூலவரை தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, சுவாமிக்கு தீர்த்தவாரி, கலசாபிஷேகம் நடைபெற்றது. நேற்று இரவு 8 மணியளவில் அம்பாளிடம் வேல் பெற்று சூரபத்மனை வதம் செய்ய முருகப் பெருமான் புறப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, தெற்கு கோபுர சந்திப்பில் முருகப் பெரு மான் படை சூழ, யானை, சிங்கம் உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது.

சேவல், மயிலாக மாறிய காட்சி

பிறகு, மாமரமாக மாறிய சூரன், அதை பிளந்தபோது, சேவல், மயிலாக மாறிய காட்சி நடந்தது. அப்போது, ஆயிரத்துக்கும் மேற் பட்ட பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர்.

பக்தர்கள் வசதிக்காக பழனி ஆண்டவர் கோயில் தெருவில் பெரிய திரை அமைக்கப்பட்டு இருந்தது. அதில், சூரனை வதம் செய்யும் காட்சியை பக்தர்கள் பார்த்தனர். பாதுகாப்பு பணி யில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீ ஸார் ஈடுபட்டிருந்தனர்.

திருக்கல்யாண உற்சவம்

இதைத் தொடர்ந்து, இன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. நாளை முதல் 7-ம் தேதி வரை இரவு 7 மணிக்கு சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதேபோல், கந்தகோட்டம் முருகன் கோயிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று இரவு 7 மணியளவில் சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்விலும், நூற்றுக்கணக் கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். இதேபோல், சென்னை முழுவதும் பல்வேறு முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x