Published : 03 Nov 2019 07:55 AM
Last Updated : 03 Nov 2019 07:55 AM

ரூ.180 கோடி மதிப்பில் புதுப்பொலிவு பெறும் தஞ்சை பெரிய கோயில் அகழி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கோட்டைச் சுவரும் சீரமைக்கப்படுகிறது

தஞ்சாவூர் பெரிய கோயில் பகுதியில் அகழியை ஒட்டியுள்ள கோட்டைச்சுவரை சீரமைக்கும் பணிக்காக இரும்புக் குழாய்களைக் கொண்டு சாரம் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோயிலைச் சுற்றியுள்ள அகழியும், கோட்டைச் சுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.180 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளன.

தஞ்சாவூர் நகராட்சி கடந்த 2014-ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப் பட்டு, ரூ.904 கோடி மதிப்பீட்டில் 12 விதமான பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் பகுதியில் உள்ள அக ழியைச் சுத்தப்படுத்தும் பணிக் காக ரூ.180 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டது.

இதன்படி, தஞ்சாவூர் பெரிய கோயில் பின்பகுதியில் கல்லணைக் கால்வாய் கரையில் இருந்து தொடங்கும் அகழியின் பெரிய கோயிலின் வடக்கு பகுதி மற்றும் முன்புறம் வரை சுத்தப்படுத்தி இரு புறமும் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. அதில் புல்தரைகள், படித் துறைகள் அமைப்பதுடன் கோட் டைச் சுவர்களை சீரமைக்கும் பணி யும் மேற்கொள்ளப்பட உள்ளது.

4.25 கிலோ மீட்டர் நீளமுள்ள அகழியில் கல்லணைக் கால்வாயில் இருந்து விடப்படும் தண்ணீர், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்யும் மழைநீர் என ஆண்டுக்கு 6 மாதங்களுக்கு தண்ணீர் நிரம்பிக் காணப்படும்.

மேலும், புதிதாக அமைக்கப்பட உள்ள நடைபாதையின் ஓரத்தில் கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகள், கலாச்சார மையங் கள், பெரிய கோயில் பற்றிய விளக்கக்கூடம் போன்றவையும் அமைக்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் நிறைவடைந்து அகழி சுத்தப்படுத்தப்பட்டு நீர் நிரப்பப் பட்டவுடன், அகழியில் படகு சவாரி விடப்படும்.

பெரிய கோயிலைச் சுற்றியுள்ள பெரிய கோட்டைச்சுவர் 35 அடி உயரம், 15 அடி அகலம் கொண்டது. இந்த கோட்டைச் சுவர் பல இடங்களில் சிதிலமடைந் தும், உடைந்தும் காணப்படுகிறது.

இதேபோல இந்த கோட்டைச் சுவருக்கு உட்பகுதியில் சின்ன கோட்டைச்சுவரும் உள்ளது. இந்த கோட்டைச்சுவர் கி.பி.1003-ம் ஆண்டு முதல் கி.பி.1006-ம் ஆண்டுக்குள் கட்டப்பட்டது. இந்த 2 கோட்டைச்சுவர்களும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x