Published : 03 Nov 2019 07:38 AM
Last Updated : 03 Nov 2019 07:38 AM

தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் ‘அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்’ அறிமுகம்: ரூ.76 கோடி செலவில் ஆடுகளங்கள் அமைக்க, போட்டிகள் நடத்த அரசு முடிவு

சென்னை

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூ ராட்சிகளில் ‘அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’ செயல் படுத்த ரூ.76 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.

சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 9-ம் தேதி முதல்வர் பழனி சாமி 110-விதியின் கீழ், கிராமங் களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் 2019-20 ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ.64 கோடியே 35 லட்சம் மதிப்பில் ’அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

நிதி ஒதுக்கீடு

அந்த அறிவிப்பை அடுத்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை செயல்படுத்த நிதி கோரியிருந்தார்.

அதன்படி கபடி, வாலிபால், கிரிக்கெட் அல்லது கால்பந்து விளையாட்டுகளில் ஊராட்சி ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் போட்டிகளை நடத்துதல், ஆடுகளங்கள் அமைத் தல், விளையாட்டு உபகரணங் கள் கொள்முதல் செய்து வழங்குதல், திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த 2019-20 ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.76 கோடியே 23 லட்சத்து 9,300 நிதி தேவைப் படுவதாகவும் அதை ஒதுக்கும் படியும் கோரியிருந்தார்.

போட்டிகள் நடத்த..

மேலும், இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சி களுக்கு விளையாட்டு உபகரணங் கள் வழங்கவும் போட்டிகள் நடத்தவும் ரூ.25 ஆயிரம், உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் அல்லது வகுப்பு ஆசிரியருக்கான மதிப்பூதியம் ரூ.4 ஆயிரம் வழங் கவும், திட்டம் குறித்த விளம் பரத்துக்காக ரூ.1 கோடி என்ற அடிப்படையில் தொடரும் செல வினமாக ரூ.38 கோடியே 85 லட்சத்து 8 ஆயிரம் வழங்கவும் கோரியிருந்தார்.

இந்த கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு பல்வேறு உத்தரவு களை வழங்கியுள்ளது. அதன்படி, அம்மா இளைஞர் விளை யாட்டுத் திட்டத்தை அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்த இருபாலருக்கும் தனித்தனியாக அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்க வேண்டும். இது தவிர, மாவட்ட அளவிலான விளையாட்டு ஆலோசனைக்குழு, ஊராட்சி, பேரூராட்சி விளையாட்டு ஆலோசனைக் குழுக்கள் அமைக்க வேண்டும். இந்த ஆலோசனைக் குழுக்கள் தெரிவிக்கும் கருத்து களின் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

கபடி, வாலிபால் மற்றும் கிரிக்கெட், பூப்பந்து அல்லது இதர விளையாட்டுகள் இவற் றில் ஏதேனும் 3 விளை யாட்டுகளுக்கு ஊராட்சி ஒன் றியம், மாவட்டம், மாநில அளவில் போட்டிகளை நடத்தவும் ஆடுகளங்கள் அமைக்கவும் உப கரணங்கள் கொள்முதல் செய்து வழங்கவும் திறந்தவெளி உடற் பயிற்சி மையம் அமைக்கவும் ஒப் புதல் வழங்கப்படுகிறது. இந்த 2019-20 ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.76 கோடியே 23 லட்சத்து 9,300 நிதி ஒதுக் கீடும் செய்யப்படுகிறது.

அம்மா இளைஞர் விளை யாட்டுத் திட்டத்தின் கீழ் ஆடுகளம் அமைக்கும் பணிகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும், பேரூராட்சிகளில் பேரூராட்சிகளின் பொதுநிதியில் இருந்தும், பொது நிதி வசதியில்லாத பேரூராட்சிகளில் இத்திட்டத்தின் சேமிப்பு நிதியில் இருந்தும் மேற்கொள்ள வேண் டும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறையிடம்...

தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கெனவே ஆண்டுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீட்டில், கிராமப்புற விளை யாட்டுத்திட்டம் செயல்படுத்தப் பட்டு வந்தது. அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் இத்திட்டத்தின் கீழ், கிராமப்புற இளைஞர்கள் மத்தி யில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த திட்டத்தின் மறு உருவாக் கமே, தற்போது அம்மா இளை ஞர் விளையாட்டுப் போட்டி என்று விளையாட்டுத் துறை யினர் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள் தகவல்

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, ‘‘தமிழ் நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் சார்பில் மாவட்டம் தோறும் ஒரு அதி காரி மற்றும் 4 பயிற்சியாளர் கள் மட்டுமே பணியாற்று கின்றனர். இவர்களைக் கொண்டு அந்த மாவட்டத் தில் உள்ள ஊராட்சிகளில் போட்டிகளை நடத்துவது என்பது கடினம். அதே நேரத் தில், வட்டார வளர்ச்சி அலு வலர்கள் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணி களை மேற்கொண்டுவரும் சூழலில், இந்த விளை யாட்டுப் போட்டிகளை நடத்த உத்தரவிடுவது, நிதி ஒதுக்குவதற்கான நோக் கத்தை சிதைத்துவிட வாய்ப்பு உள்ளது.

எனவே, பள்ளிக்கல்வித் துறை யிடம் ஒப்படைத்தால், உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசி ரியர்கள் இந்த போட்டிகளை நடத்து வார்கள். ஒவ்வொரு பகுதியிலும் விளையாட்டு மைதானங்களும் உரு வாக்கப்படும். மாணவர்களுக்கும் விளையாட்டு வாய்ப்புகள் கிடைக் கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x