Published : 25 Jul 2015 08:18 AM
Last Updated : 25 Jul 2015 08:18 AM

சின்னத்திரை இயக்குநர் காலமானார்

சின்னத்திரை இயக்குநர் விடுதலை (வயது 52) உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.

கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த விடுதலை கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை 6 மணிக்கு உயிரிழந்தார்.

‘அக்னிசாட்சி’, ‘தேடல்’, ‘அவளும் பெண்தானே’, ‘நெற்றிக்கண்’, ‘ஆனந்தம்’, ‘குறிஞ்சி மலர்’ உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களை இவர் இயக்கியுள்ளார். சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற இவர் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்.

வழக்கறிஞர் அருள்மொழியை இவர் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இவர்களுக்கு குயில்மொழி என்ற மகள் இருக்கிறார். விடுதலையின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் இன்று நடக்கின்றன.

விடுதலையின் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x