

சென்னை
தனது மகளின் திருமண அழைப்பிதழை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அளித்தார்.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது இளைய மகளின் திருமண அழைப்பிதழை கட்சி பாகுபாடின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு நேரில் சென்று வழங்கி வருகிறார். சமீபத்தில், பிரதமர் நரேந்திரமோடி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு நேரில் சென்று அழைப்பிதழை வழங்கினார்.
இந்நிலையில், இன்று (நவ.2) திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அண்ணா அறிவாலயத்தில் ஹெச்.ராஜா, தன் மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
இதுதொடர்பாக திமுக வெளியிட்ட பத்திரிகை செய்தியில், "மு.க.ஸ்டாலினை இன்று, காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேரில் சந்தித்து, தனது இல்லத் திருமண விழா அழைப்பிதழை அளித்தார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.