

சென்னை
மாநகராட்சி டெண்டர்களில் முறை கேடு நடந்துள்ளதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முழுக்க, முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உயர் நீதி மன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
‘‘சென்னை, கோவை மாநக ராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஒதுக்கப்பட்டுள்ள பெரும்பாலான டெண்டர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்க மானவர்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விவ காரம் தொடர்பாக சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்யவும், சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என அறப்போர் இயக்கம் சார்பில் ஜெய்ராம் வெங்க டேஷ் மற்றும் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடரப் பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷ சாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் நேற்று தாக்கல் செய்யப் பட்ட பதில்மனுவில், ‘‘மாநக ராட்சி டெண்டர்களில் முறைகேடு கள் நடந்துள்ளதாக என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு முழுக்க, முழுக்க அரசியல் உள்நோக்கமுடையது. குறிப் பிட்ட நிறுவனங்களுக்கு டெண்டர் கள் ஒதுக்கப்பட்டதில் எந்த நடைமுறைகளும் மீறப்படவில்லை. அந்த நிறுவனங்களைச் சேர்ந்த வர்கள் எனது பினாமிகள் என என் மீது மனுதாரர்கள் பொய் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
இந்த வழக்கே அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வும், அரசியல் ஆதாயத்துக்காக வும் எனக்கு எதிராக தொடரப் பட்டுள்ளது. நான் எம்எல்ஏவாகும் முன்பே எனது சகோதரர்களின் நிறுவனங்களிலும், கோவை மாந கராட்சியின் ஒப்பந்ததாரராகவும் இருந்துள்ளேன். ஆனால் நான் பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு அந்த நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை வைத்து தற்போது எனது புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என அதில் கோரியிருந் தார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நட ராஜன் ஆஜராகி, ‘‘அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணை நடை பெற்று வருகிறது. மனுதாரர்களின் புகார்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை. இந்த விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய 2 மாதம் அவகாசம் தேவை’ என வாதிட்டார்.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘ இந்த புகார்கள் குறித்தும், டெண்டர்கள் தொடர்பான இணையதள முகவரி தொடர்பாகவும் தொழில்நுட்ப ரீதி யாக ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதற்கு சிறிதுகாலம் பிடிக்கும். அதன்பிறகே அடுத்தகட்ட நட வடிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்’ என்றார்.
அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் ஆஜராகி, ‘பொதுவாக ஒரு புகார் மீது முகாந்திரம் இருந்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லலிதாகுமாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஆனால் அந்த நடை முறைகளை இந்த வழக்கில் லஞ்சஒழிப்புத் துறை கடைபிடிக்க வில்லை. ஒரே இணையதள முகவரியில் இருந்து டெண்டர்கள் விண்ணப்பிக்கப்பட்டு முறைகேடு கள் நடந்துள்ளது. அமைச்சருக்கு எதிரான இந்த புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை ஓராண் டுக்கு மேல் நடந்து வருகிறது. வழக்குப்பதிவு செய்வதற்கான ஆதாரங்களை ஏற்கெனவே தாக்கல் செய்துவிட்டோம். மாநில காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் தான் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தக்கோருகிறோம்’ என வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அமைச்சர் வேலு மணிக்கு எதிரான புகார் குறித்த ஆரம்ப கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை வரும் டிச.18-க்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசா ரணையை தள்ளி வைத்துள்ளனர்.