Published : 02 Nov 2019 07:29 AM
Last Updated : 02 Nov 2019 07:29 AM

கழிவுநீர் விடுவதை தடுக்காததால் கூவம் ஆறு தொடர்ந்து மாசுபட்டு வருகிறது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து

சென்னை

கூவம் ஆற்றில் கழிவுநீர் விடுவதை தடுக்க இயலாததாலும், ஆற்றை சீரமைப்பதற்கான திட்டத்தில் உள்ள குறைபாட்டாலும் அந்த ஆறு தொடர்ந்து மாசுபட்டு வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் கூவம் ஆற்றை தூய்மைப் படுத்தும் நிகழ்ச்சி சென்னை நேப்பியர் பாலம் அருகில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து குப்பைகளை அகற்றினார். பின்னர் அருகில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:

இயற்கை வளங்களை பாது காப்பதும், அதை வளம் குன்றாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் மிகமிக அவசியம். கூவம் ஆறு சென்னையில் வாழும் மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்து இருந்தது.

20-ம் நூற்றாண்டின் தொடக் கத்தில் இந்த ஆற்றில் தூய நீர் ஓடியது. இதில் 1950-ம் ஆண்டு காலகட்டத்தில் 49 வகையான மீன் இனங்களும், 1970-ம் ஆண்டு காலகட்டத்தில் 21 வகையான மீன் இனங்களும் இருந்ததாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர்.

இந்த ஆற்றில் நச்சுத்தன்மை அதிகரித்து மாசடைந்திருப்பதால் இப்போது ஒரு மீன் இனமும் இல்லை. இந்த ஆற்றை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டா லும், ஆற்றில் கழிவுநீர் விடுவதை தடுக்காதது, ஆற்றை சீரமைக்கும் விரிவான திட்டத்தில் உள்ள குறை பாடுகள் காரணமாக கூவம் ஆறு தொடர்ந்து மாசுபட்டு வருகிறது.

இதற்கிடையில், மக்கள்நலன் சார்ந்த நோக்கத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 4-வது அணி சார்பில் கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த அணி சார்பில், சென்னை மாநக ராட்சி உள்ளிட்ட அரசுத் துறைகள், தன்னார்வ அமைப்புகள் ஆகியவற் றுடன் இணைந்து நேப்பியர் பாலத்தில் இருந்து சுமார் 13 கிமீ நீள கூவம் ஆற்றை தூய்மைப் படுத்த உள்ளது. இதில் 1500 தன்னார்வலர்கள் பங்கேற்று, கோயம்பேடு, அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ஸ்பர்டாங் சாலை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, கிரீம்ஸ் சாலையில் அப்பல்லோ மருத்துமனை அருகில், நேப்பியர் பாலம் அருகில் ஆகிய இடங் களில் உள்ள கூவம் ஆற்றின் கரை யோரம் தூய்மை பணிகளை மேற் கொள்ள உள்ளனர். இவர்கள் மாதம் இருமுறை என அடுத்த 4 மாதங்களுக்கு தூய்மை பணியில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், தேசிய பேரிடர் மீட்புப் படை தலைமை இயக்குநர் எஸ்.என்.பிரதான், படையின் 4-வது அணி கமாண்டென்ட் ரேகா நம்பியார், முன்னாள் டிஜிபி (தமிழ் நாடு மாநில பேரிடர் மீட்பு படை) ஆஷிஸ் பேங்க்ரா, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் டி.சுரேஷ் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x