

சென்னை
ஆதம்பாக்கத்தில் சொத்துக்காக 13 வயது சிறுமியை கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வேதவல்லி. இவரது மகன் பாபு(33). வேதவல்லியின் தம்பி மகள் ஷோபனா(13). சிறுவயதி லேயே பெற்றோரை இழந்த ஷோபனா, தனது அத்தை வேத வல்லியின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 29-ம் தேதி, பணி நிமித்தமாக வேத வல்லி வெளியில் சென்றுவிட, வீட்டில் தனியாக இருந்த சிறுமி, உடல் முழுவதும் 10-க்கும் மேற் பட்ட இடங்களில் கத்தியால் குத்தப் பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆதம்பாக்கம் காவல் நிலைய போலீஸார், 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சிறுமியின் அத்தை வேதவல்லியின் மகன் பாபு. கொலை நடந்த நாளன்று, வீட்டுக்கு வந்து சென்றதாக அக்கம்பக்கத் தினர் தெரிவித்தனர். மேலும், வேதவல்லியின் வீட்டு அருகே இருந்த கண்காணிப்பு கேமராக் களில் பதிவான காட்சிகள் மூலம் பாபு வந்து சென்றதை போலீஸார் உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து, தலைமறை வாக இருந்த பாபுவை, சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆதம்பாக்கம் தனிப்படை போலீ ஸார் நேற்று கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்கு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
13 வயது சிறுமியைக் கொடூர மாகக் கொலை செய்த பாபு, திருமணமாகி 2 குழந்தைகளுடன் அயனாவரத்தில் வசித்து வரு கிறார். பெயின்டர் வேலை பார்த்து வரும் பாபு, தனது தாயார் வேத வல்லியிடம், வீட்டை தனது பெயருக்கு எழுதித் தருமாறு கேட்ட தாகக் கூறப்படுகிறது.
தான் வசிக்கும் வீடு, சிறுமி ஷோபனாவுக்குத்தான் என்று வேதவல்லி கூறியதால், ஆத்திரமடைந்த பாபு, சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக வாக்குமூலத்தில் பாபு தெரிவித்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்