

சென்னை
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி யத்தின் பயன்படாத 126 ஆழ்துளை கிணறுகளை அவ்வாரியம் மூடி உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 556 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் மூலம் தினமும் 1,906 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் 114 திட்டங்கள் ஆழ்துளை கிணறு களை ஆதாரமாக கொண்டு செயல் படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த இரு நாட்களாக குடிநீர் வடிகால் வாரியம் எடுத்த கணக் கெடுப்பில், அவ்வாரியம் அமைத் துள்ள 959 ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டு, அவற்றில் 833 ஆழ்துளை கிணறுகள் பயன் பாட்டில் இருப்பது தெரியவந் துள்ளது. பயன்படாத நிலையில் உள்ள 126 ஆழ்துளை கிணறுகள், ஆடுகள், மாடுகள், குழந்தைகள் விழுந்து விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக மூடப் பட்டன. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.