இந்திய வானிலை மைய வரலாற்றில் ஒரே நேரத்தில் உருவான இரு புயல்கள்: அரபிக் கடலை நோக்கி நகர்ந்தது ஏன்? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

ச.கார்த்திகேயன்

சென்னை

இந்திய வானிலை ஆய்வு மைய வரலாற்றில் இதுவரை ஒரே நேரத் தில் இரு புயல்கள் நிலவியதில்லை. இந்த இரு புயல்களும் அரபிக் கடலை நோக்கி நகர்ந்தது ஏன் என சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் முதல்முறை யாக 1792-ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் தான் வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. இம்மையம் கடந்த 100 ஆண்டு களுக்கு மேலாக, ஒருநாள் தவ றாது வானிலை தொடர்பான தரவுகளை பதிவுசெய்து வரு வதற்காக உலக வானிலை ஆய்வு நிறுவனம், உலக அங்கீ காரம் வழங்கியுள்ளது. இம்மையம் சார்பில் வங்கக் கடல் மற்றும் அர பிக் கடலில் உருவாகும் புயல் தொடர்பான தரவுகள், கடந்த 1891-ம் ஆண்டு முதல் ஆவணப் படுத்தப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, இந்தியாவில் இது வரை 349 புயல்கள் உருவாகி உள்ளன. இதில் அதிகபட்சமாக வங்கக் கடலில் 289 புயல்களும், அரபிக் கடலில் 53 புயல்களும், நிலப் பகுதியில் 10 புயல்களும் உருவாகியுள்ளன.

இப்புயல்களில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 145 புயல் களும், வடகிழக்கு பருவமழை காலத்தில் 150 புயல்களும் உரு வாகியுள்ளன. இதர பருவங்களில் 57 புயல்கள் உருவாகியுள்ளன.

வடகிழக்கு பருவமழைக் காலத் தில் வங்கக் கடலில் 124 புயல்கள் உருவாகியுள்ளன. அரபிக் கடலில் இதுவரை 25 புயல்கள் மட்டுமே உருவாகியுள்ளன. 1917, 1930, 1963, 1992, 2001 ஆகிய ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அரபிக் கடலில் இரு புயல்கள் உருவாகியுள்ளன. ஆனால் இந்திய கடல் பரப்பிலேயே இதுவரை ஒரே நேரத்தில் இரு புயல்கள் எழுந்ததில்லை. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி, உருவான இரு புயல்களுமே அரபிக் கடல் நோக்கி சென்றதால், தமிழகத்துக்கு பெரிய அளவில் மழை கிடைக்கவில்லை. அரபிக் கடலில் எப்போதாவது புயல் ஏற்படும் நிலையில், தற் போது ஒரே நேரத்தில் இரு புயல்கள் நிலவி வருவது உலக வானிலை ஆய்வாளர்களின் கவ னத்தை ஈர்த்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை தலைமை இயக்குநர் எஸ்.பால சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

இந்திய வானிலை ஆய்வு மைய வரலாற்றில் 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் ஒன்றன் பின் ஒன்றாக இரு புயல்கள் உருவாயின. ஆனால் ஒரே நேரத்தில் இரு புயல் கள் நிலவியதில்லை. இதுவே முதல்முறை. ஒரு புயல் வலுப் பெறவும், உயிர்ப்புடன் இருக்க வும் கடல் பரப்பு வெப்பம் குறைந்த பட்சம் 26.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

அப்போதுதான், கடல் நீர் ஆவி யாகி புயலை உயிர்ப்புடன் வைத் திருக்கும். நீராவி இல்லாவிட்டால் புயல் வலுவிழந்துவிடும். வங்கக் கடல் பரப்பை விட, அரபிக் கடல் பரப்பில் வெப்பம் அதிகமாக உள் ளது. அதனால் அதை நோக்கி புயல் நகர்ந்துள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in