

சென்னை
சென்னையில் இருந்து குவைத் சென்ற விமானத்தில் நடுவானில் திடீரென தீப்பிடித்தது. இது உட னடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் 163 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து குவைத் துக்கு இண்டிகோ விமானம் நேற்று அதிகாலை 4.05 மணிக்கு புறப் பட்டு சென்றது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது சரக்குகள் வைக்கப்பட்டிருக் கும் பகுதியில் திடீரென தீப் பிடித்தது. இதைத்தொடர்ந்து விமானத்தில் இருந்த தானியங்கி அலாரம் ஒலிக்க ஆரம்பித்தது. விமானத்தை தரையிறக்க முடிவு செய்த விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதனால் விமானம் தரையிறங்குவதற்கு உடனடியாக அனுமதி கொடுக்கப் பட்டது. மேலும், ஓடுதளத்தில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், பாதுகாப்பு வீரர் கள் தயாராக நிறுத்தி வைக்கப் பட்டு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டன.
விமானம் தரையிறங்கியதும், அதிலிருந்த பயணிகள் வேக மாக வெளியேற்றப்பட்டனர். விமா னத்தில் சரக்குகள் வைக்கப்பட் டிருந்த பகுதிக்கு சென்ற தீய ணைப்பு வீரர்கள், அங்கு பிடித் திருந்த தீயை உடனடியாக அணைத்தனர். விமானத்தில் பிடித்த தீ சரியான நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு, அணைக்கப்பட்ட தால் அதில் பயணம் செய்த 163 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சரக்குகள் பகுதி யில் தீப்பிடித்தது குறித்து விமான நிலைய ஆணையரக அதிகாரி கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் 163 பயணி களும் மாற்று விமானத்தில் குவைத் துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.