

தூத்துக்குடி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவ.2) மாலை நடை பெறுகிறது. அதைக் காண லட்சக் கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில்தான் சூரபத் மனை, முருகப்பெருமான் வதம் செய்ததாக புராணங்களில் குறிப் பிடப்பட்டுள்ளது. எனவே, இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இக்கோயிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 28-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங் கியது. முக்கிய நிகழ்ச்சியான சூர சம்ஹாரம் இன்று (நவ. 2) நடை பெறுகிறது. இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின் றன.
காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால பூஜை, பகல் 12 மணிக்கு ஜெயந்திநாதருக்கு யாகசாலை யில் தீபாராதனை நடக்கிறது.
12.45 மணிக்கு தங்க சப்பரத் தில் சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலையில் இருந்து எழுந்தருளி, மேளவாத்தியங்களுடன் சண்முக விலாசம் சேருகிறார். பிற்பகல் 2 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவா மிக்கு அபிஷேகம் நடைபெறும்.
மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக் காக கடற்கரைக்கு எழுந்தருள் கிறார். அங்கு, முதலில் கஜமுகத் தோடும், பின்னர் சிங்க முகத்தோ டும், 3-வதாக சுயரூபத்தோடும் வரும் சூரபத்மனை வதம் செய் கிறார். பின்னர், மயிலாகவும், சேவ லாகவும் சூரபத்மனை ஆட்கொள்கி றார். அப்போது, விரதம் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கடற் கரையில் திரண்டு ‘அரோகரா’ கோஷம் முழங்க சுவாமியை தரி சிப்பர். தொடர்ந்து சந்தோஷ மண் டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக் கும் தீபாராதனை நடைபெறும். பின்னர், பிரகார உலா வந்து சுவாமி கோயில் சேருகிறார். இரவு 108 மகாதேவர் சந்நிதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடு கள் கட்டப்படும். நாளை (நவ. 3) திருக்கல்யாணம் நடைபெறும்.
கந்தசஷ்டி விழாவை முன் னிட்டு கடந்த 6 நாட்களாக ஆயிரக் கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் தங்கி விரதம் அனுசரித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக, தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் திருச்செந் தூரில் குவிந்து வருகின்றனர்.
சிக்கல் கோயிலில் சக்திவேல் வாங்கிய சிங்காரவேலவர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கடந்த அக்.28-ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா நேற்று காலை நடைபெற்றது. நேற்றிரவு தேர் நிலைக்கு வந்தவுடன், தேரில் இருந்து இறங்கி கோயிலுக்குள் சென்ற சிங்காரவேலவர், திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் இருந்து சக்திவேலை வாங்கினார். அப்போது, சிங்காரவேலவரின் முகத்தில் முத்துமுத்தாக வியர்வை அரும்பிய காட்சியைக் கண்டு திரளான பக்தர்கள் வழிபட்டனர்.