Published : 01 Nov 2019 02:21 PM
Last Updated : 01 Nov 2019 02:21 PM

செங்கோட்டை தாலுகா மற்றும் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட தினம் இன்று

அ.அருள்தாசன்

திருநெல்வேலி

சுதந்திரத்துக்குப் பின்னரும் கேரளத்துடன் இணைந்திருந்த தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த பகுதிகளான கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டை தாலுகாவும், தாய் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை தாலுகாவும் அப் போதைய திருவிதாங்கூர் சமஸ் தானத்துடன் (கேரள மாநிலம்) இணைந்திருந்தன. மொழிவாரி சிறுபான்மை பகுதிகளான இப் பகுதிகளை, தாய் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை, சுதந்திரத்துக்குப் பின்னர் வலுப்பெற்றது. தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசித்த, அகஸ் தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின் கரை, தேவிகுளம், பீர்மேடு, செங் கோட்டை ஆகிய தாலுகாக்களை மீண்டும் தாய் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதற்காக, இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் தலைவர்கள் பல்வேறு போராட்டங்களை முன் னெடுத்தனர். பலர் தங்கள் இன்னு யிரை இழந்தனர். இதன்விளை வாக, மொழிவாரியாக மாநிலங் களைப் பிரிப்பது என, நாட்டின் முதலாவது பிரதமர் நேரு தலைமை யிலான மத்திய அரசு முடிவு செய்தது.

நெய்யாற்றின்கரை, தேவி குளம், பீர்மேடும் ஆகியவற்றைத் தவிர, மற்ற தாலுகாக்கள் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி, தமிழகத் துடன் இணைக்கப்பட்டன. இந்த தினம், கன்னியாகுமரி மாவட்டத் தில் ஆண்டுதோறும் உணர்வு பூர்வமாக கொண்டாடப்படுகிறாது. செங்கோட்டை பகுதிகளில் இவ் விழா அந்தளவுக்கு கொண்டாடப் படுவதில்லை.

இதன் வரலாற்று முக்கியத் துவம் குறித்து, பாளையங் கோட்டையிலுள்ள வரலாற்று ஆய் வாளர் செ.திவான் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட விழா நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் 1.11.1956-ம் தேதி காலையில் நடைபெற்றது. இந்த விழாவில் அப்போதைய முதல்வர் காமராஜர், அமைச்சர்கள் பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேநாள் மாலையில் செங்கோட்டையில் ஓர் இணைப்பு விழா நடத்தப்பட்டது. கேரளத்துடன் இணைந்திருந்த செங்கோட்டை பகுதிகளான அச்சன்புதூர், ஆய்குடி, கிளாங்காடு, சாம்பவர் வடகரை, மார்த்தாண்டபுரம் ஆகியவை தமிழகத்துடன் இணைக் கப்பட்டன. இந்த இணைப்பு விழா வில் அமைச்சர் சி.சுப்பிரமணியம் பங்கேற்றார்.

வரவேற்பு குழு தலை வரும் செங்கோட்டை நகராட்சி தலைவருமான மு.சுப்பிரமணிய கரையாளர், பி.டி.ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மன்னர் கார்த்திகை திருநாள் ராமவர்மா காலத்தில் இந்த பகுதிகள் மலையாள பகுதிகளாக இருந்துள்ளன. 1855-ல் அம்பாச முத்திரம் மலையாங்குளம் பகுதியை திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் வாங்கிவிட்டு, புளியரை பகுதியை பதிலுக்கு கொடுத்திருக் கிறார். 1956-ல் புளியரை மீண்டும் திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

கேரளத்திலிருந்து தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதி களை பிரித்து தமிழகத்துடன் இணைக்கும் விழா நடைபெற்ற 1.11.1956-ம் தேதிக்கு முந்தைய நாளில் பாளையங்கோட்டைக்கு காமராஜர் வந்திருந்தார். அவரை, மார்ஷல் நேசமணி சந்தித்து விரி வான பேச்சுவார்த்தை நடத்தினார்.

தெற்கெல்லை போராட்ட வரலாறு மிகநெடியது. இந்த போராட்டத்தில் உயிர்நீத்தவர்கள் பலர். இந்த போராட்டங்களால் கேரளத்தின் பல்வேறு பகுதிகளும் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட பின்னரே, `சென்னை மாகாணம்’ என்ற பெயரை `தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்று, திவான் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x