குடிநீருக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்தவர் உயிரிழப்பு: குடிநீர் தட்டுப்பாடே காரணம் என கிராம மக்கள் வேதனை 

குடிநீருக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்தவர் உயிரிழப்பு: குடிநீர் தட்டுப்பாடே காரணம் என கிராம மக்கள் வேதனை 
Updated on
1 min read

திருப்போரூர்

காஞ்சிபுரம் மாவட்டம், திருப் போரூர் ஒன்றியம் சிறுங்குன்றம் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் குழாய் மூலம் குடிநீர் வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்கவில்லை என்றும் கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால், குழாயில் வரும் தண்ணீரை பிடிப்பதற்காக வீடுகள் தோறும் சுமார் 4 அடி ஆழம், 3 அடி அகலத்தில் குழிகள் தோண்டப் பட்டுள்ளன. இந்த குழிகளில் உள்ள குழாயில் வரும் குடிநீரை கிராம மக்கள் குடங்களை வைத்து பிடித்து பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், பெயின்டராக பணிபுரிந்து வந்த சிறுங்குன்றம் திடீர்நகரை சேர்ந்த பாபு (46), தனது வீட்டின் முன்பு உள்ள குழியில் இறங்கி குடிநீர் பிடிக்க முயன்றார். அப்போது நிலை தடுமாறி குழியில் விழுந்ததில் பலத்த காயமடைந்ததாக கூறப் படுகிறது. சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர். எனினும், காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக தெரிகிறது. தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் ரகுபதி கிராமப் பகுதிக்கு நேரில் சென்று, குழித்தோண்டி யாரும் குடிநீர் பிடிக்கக் கூடாது. சாலைக்கு மேலே குழாய் அமைத்து தருவதாக கூறிச் சென்றதாக கூறப்படுகிறது.

திருப்போரூர் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, சிறுங்குன்றம் கிராம மக்கள் கூறும்போது, "சாலைக்கு மேலே குழாய் அமைத்தாலும் குழாயில் முறை யாக குடிநீர் வராததால் குழி தோண்டி குடிநீர் பிடித்து வருகி றோம். வட்டார வளர்ச்சி அதிகாரி கள் கிராமப் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்துவிட்டு செல்கிறார்களே தவிர மாற்று நடவடிக்கைகளை மேற்கொள் வதில்லை. அதனால், ஒவ்வொரு வீடுகளில் குடிநீர் பிடிப்பதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. மழைக் காலங்களிலும் இந்த பள்ளங்களில் தண்ணீர் நிரம்பிவிடுவதால், குடிநீர் பிடிக்க முடியாமல் பாதிக்கப் படுகிறோம்" என்றனர்.

செங்கல்பட்டு சுகாதார மாவட்ட துணை இயக்குர் பழனி கூறும்போது, "சிறுங்குன்றம் கிராமத்தில் குழிதோண்டி குடிநீர் பிடிப்பது தொடர்பாக தகவல் கிடைத்தது. குடிதோண்டி பிடிக்கப் படும் குடிநீரை பருகுவதன் மூலம் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படும் அபா யம் உள்ளது. அதனால், மேற்கண்ட கிராமத்தில் சுகாதாரத் துறையினர் நேரில் ஆய்வு செய்து குழிகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in