

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஒரே இரவில் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
47 அடி முழு கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 39 அடியை எட்டியது. தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே இரவு பகலாக மழை பெய்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நேற்று முன்தினம் ஒரே இரவில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.
47 அடி முழு கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் தற்போது 39 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.