

சென்னை
தனிநபர் வைத்திருக்கும் புனிதமான குர்ஆனின் வயதைக் கண்டறியும் வகையில், அதில் இருந்து 2 மாதிரிகள் எடுத்து இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் துக்கும், லக்னோ ஆய்வகத்துக்கும் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் மயி லாடுதுறை தாலுகாவைச் சேர்ந்த ஏ.எம்.எஸ்.அமீனுல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘அரபு மொழியில் கையால் எழுதப்பட்ட புனிதமான குர்ஆன் நூல் என்னிடம் உள்ளது. இது மிகவும் பழமையானது என்ப தால் இதன் வயதைக் கண்டறியும் வகையில் இந்த நூலில் இருந்து மாதிரிகள் எடுத்து இங்கிலாந்து பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கடந்த ஏப்ரல் மாதம், இந்த நூலில் இருந்து மாதிரி எடுத்து இங்கிலாந்து பல்கலைக்கு அனுப்ப வேண்டும் என தொல்லி யல் துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து இந் திய தொல்லியல் துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகி யோர் அடங்கிய அமர்வு விசாரித் தது. அப்போது தொல்லியல் துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், ‘‘அந்த பழமையான புனிதமான குர்ஆன் நூலில் இருந்து பக்கங்களை கிழித்து மாதிரி எடுத்தால் அது தொன்மையை அழித்தது போல் ஆகிவிடும். எனவே அதில் இருந்து மாதிரிகள் எடுக்க முடியாது. மேலும் இந்தியா விலேயே பல ஆய்வகங்கள் இருக் கும்போது இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டியதில்லை” என வாதிட்டார்.
ஆனால் அமீனுல்லா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அந்த நூலின் தொன்மையை ஆராய வேண்டும் என்பதுதான் எங்களின் வாதம். அதற்காக அந்த நூலின் எழுதப்படாத பக்கத்தில் இருந்து 2 செமீ உயரம், 1.5 செமீ அகலத் துக்கு மாதிரி எடுத்தாலே போதுமா னது. ஆனால் அதற்கு தொல்லியல் துறை மறுக்கிறது. மேலும் வய தைக் கண்டறிவதற்கான நவீன வசதி இந்தியாவில் இல்லை” என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘அந்த புனித மான நூலின் வயதைக் கண்டறிய வேண்டும் என அதை வைத்திருக்கும் நபர் கோருகிறார். அதை யேற்றுத்தான் தனி நீதிபதியும் உத்தரவிட்டுள்ளார்.
எனவே தொல்லியல் துறை அதிகாரிகள் அந்த நூலில் இருந்து 2 மாதிரிகளை எடுத்து அவற்றை 3 வாரத்துக்குள் அமீனுல்லா வசம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும். அமீனுல்லா அந்த நூலின் வயதைக் கண்டறியும் பொருட்டு அவற்றில் ஒன்றை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துக்கும், மற்றொன்றை லக் னோவில் உள்ள ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.