

சென்னை
பள்ளி வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி மாநிலம் முழு வதும் பரவலாக பெய்து வருகிறது.
இதையடுத்து பருவ காலத்தில் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களிடம் விழிப்புணர்வு
அதன்படி அனைத்து வகை யான பள்ளிகளும் தங்கள் வளாகங் களில் மழைநீர் சேகரிப்பு கட் டமைப்புகளை கட்டாயம் அமைக்க வேண்டும். ஏற்கெனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் அவற்றை மேலும் மேம்படுத்த வேண்டும்.
இதுதொடர்பான விழிப்புணர்வையும் மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். தவறும் பள்ளிகள்மீது ஆய்வின் போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.