பிரதமர் நரேந்திர மோடி வழியில் ஊழலுக்கு எதிராக அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்: சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாள் விழாவில் ஆளுநர் வேண்டுகோள் 

சர்தார் வல்லபபாய் படேலின் 144-வது பிறந்தநாளையொட்டி சென்னை பாரதிய வித்யா பவனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்குகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் (இடமிருந்து) மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன், எஸ்விபிஎம் டிரஸ்ட் தலைவர் என்.ஆர்.தவே, பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திர தலைவர் என்.ரவி, துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திர இயக்குநர் கே.என்.ராமசாமி. படம்:க. ஸ்ரீபரத்
சர்தார் வல்லபபாய் படேலின் 144-வது பிறந்தநாளையொட்டி சென்னை பாரதிய வித்யா பவனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்குகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் (இடமிருந்து) மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன், எஸ்விபிஎம் டிரஸ்ட் தலைவர் என்.ஆர்.தவே, பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திர தலைவர் என்.ரவி, துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திர இயக்குநர் கே.என்.ராமசாமி. படம்:க. ஸ்ரீபரத்
Updated on
2 min read

சென்னை

ஊழலை ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டேன் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பிரதமருக்கு அனை வரும் ஒத்துழைக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக நாம் உறுதி யேற்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக் கொண்டார்.

சர்தார் வல்லபபாய் படேல் நினைவு அறக்கட்டளை மற்றும் பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திரா சார்பில், சர்தார் வல்லப பாய் படேல் 144-வது பிறந்த நாள் சென்னையில் நேற்று கொண்டா டப்பட்டது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு, சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாளையொட்டி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் 68 பேருக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். அப்போது ஆளுநர் கூறியதாவது:

சுதந்திரப் போராட்டத்துக்காகப் பாடுபட்ட முக்கியமான தலைவர் களில் படேலும் ஒருவர். அவரது பெருமையைப் பறைசாற்றும் வகையில் குஜராத்தில் உலகத்தில் மிகப்பெரிய சிலையாக, ஒற்றுமை யின் சின்னமாக சர்தார் வல்லபபாய் படேல் சிலை அமைக்கப்பட் டுள்ளது. காந்தி இந்தியாவின் தந்தை என்றால், நவீன இந்தியா வின் சிற்பி சர்தார் வல்லபபாய் படேல் ஆவார்.

அவரது அடிச்சுவட்டைப் பின் பற்றி, அவரது கொள்கைகளைப் பரப்பி, லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் நாட்டுக்காக தன்னலம் இல்லாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். "ஊழலை ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டேன்" என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித் துள்ளார். அவருக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக நாம் உறுதியேற்க வேண்டும் என்றார்.

பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திரா தலைவர் என்.ரவி தலைமை உரையாற்றும்போது “காந்தி, நேரு ஆகியோரை ஒருங் கிணைத்து சுதந்திரப் போராட்டத் தின் இறுதிக்கட்டத்தை வடி வமைத்ததிலும், சுதந்திர இந்தியாவை உருவாக்கியதிலும் சர்தார் வல்லபபாய் படேலுக்கு முக்கியப் பங்கு உண்டு. நேருவுக் கும் படேலுக்கும் கருத்து வேறு பாடுகள் இருந்தாலும், நாட்டு நலனுக்காக முக்கிய முடிவுகள் எடுக்கும்போது இருவரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டனர். இந்தியா என்ற வரைபடத்தை நாம் இன்று காண்பதற்கு இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் படேல்தான் முக்கியக் காரணம்" என்றார்.

துக்ளக் ஆசிரியர் எஸ்.குரு மூர்த்தி பேசும்போது, “நாட்டைக் கட்டமைப்பதில் மிகப்பெரிய பங் காற்றியதால் சர்தார் வல்லபபாய் படேலை நாம் இன்று நினைவு கூர்கிறோம்" என்றார்.

மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் பேசும்போது, “சுதந்திரத்துக்கு முன்பும், பின்ன ரும் சர்தார் வல்லபபாய் படேலின் பங்களிப்பு பற்றி தெரிந்துகொள்ள மாணவர்கள் வரலாற்றைப் படிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, சர்தார் வல்லபபாய் படேல் நினைவு அறக்கட்டளை யின் தலைவர் என்.ஆர்.தவே வரவேற்றார். பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திரா இயக்குநர் கே.என்.ராமசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிறை வில், அறக்கட்டளையின் கவுரச் செயலாளர் கே.ஜெ.சூரிய நாராயணன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in