Published : 01 Nov 2019 09:00 AM
Last Updated : 01 Nov 2019 09:00 AM

காற்றாலை அமைப்பதாக பண மோசடி: சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை

காற்றாலை அமைத்துத் தருவதா கக் கூறி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் சரிதா நாயர் உள்ளிட்ட 3 பேருக்கு 3 ஆண்டு கள் சிறை தண்டனை விதித்து கோவை 6-வது குற்றவியல் நடு வர் நீதிமன்றம் நேற்று உத்தர விட்டது.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் நடிகை சரிதா நாயர். இவர், கடந்த 2008-ம் ஆண்டு கோவை வடவள்ளியில் ‘ஐசி எம்எஸ் பவர் அண்டு கனெக்ட்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங் கள் விற்பனை நிறுவனம் நடத்தி வந்தார். அதன்மூலம், காற்றாலை யில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை 70 சதவீத மத்திய அரசு மானியத்துடன் அமைத்துத் தருவதாக விளம்பரம் செய்தார்.

இந்த அறிவிப்பை நம்பி கோவையைச் சேர்ந்த ராஜ் நாராயண் டெக்ஸ்டைல்ஸ் மேலாண் இயக்குநர் தியாகராஜன் ரூ.26 லட்சம், உதகையைச் சேர்ந்த  அபு பாபாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகி ஜோயிஸ்ட்னா கிளாட்சன் ரூ.7 லட்சம் அளித்துள்ளனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி காற்றாலை அமைத்துத் தர எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சரிதா இழுத்தடிப்பு செய்துள்ளார்.

இதையடுத்து, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீ ஸில் 2008 டிச.3-ம் தேதி தியாகராஜன் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து ஏமாற்றப்பட்ட மற்றவர்களும் புகார் அளித்தனர். இதையடுத்து, சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ நாயர், நிறுவனத்தின் மேலாளர் ரவி ஆகியோர் மீது போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நீதிபதி கே.ஆர்.கண்ணன் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். அதில், சரிதா நாயர், பிஜூ நாயர், ரவி ஆகியோர் மோசடி செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மூவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக் கிறேன் என தீர்ப்பில் கூறியிருந்தார்.

தண்டனை நிறுத்திவைப்பு

அதைத்தொடர்ந்து, சரிதா நாயர், பிஜூ நாயர், மேலாளர் ரவி ஆகிய 3 பேரும் தண்ட னையை நிறுத்தி வைக்கக்கோரி நீதிபதியிடம் மனு அளித்தனர். பின்னர், 3 பேரின் தண்டனையை நவ.14 வரை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த காலத் துக்குள் மூவரும் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவர்களது தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.தங்கராஜ் ஆஜ ரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x