Published : 01 Nov 2019 08:57 AM
Last Updated : 01 Nov 2019 08:57 AM

நீலகிரி, நெல்லை, குமரி, தூத்துக்குடியில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : குன்னூரில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் முகாம்

திருநெல்வேலி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்/நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரண மாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீரமைப்புப் பணியில் ஈடுபடுவதற் காக தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினர் குன்னூர் வந்தடைந் தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று உதகை, குன் னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாக் களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது. மழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்து வருகின்றன. நேற்று அதிகாலை மேட்டுப் பாளையம்-குன்னூர் சாலையில் மரப்பாலம் பகுதியில் மரம் சாலையில் விழுந்தது. இதனால், போக்குரவத்து தடைபட்டது.

நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. குன்னூர் மவுண்ட் ரோட்டில் மண் சரிவு ஏற்பட்டு, தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.

குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட கக்காச்சி பாரதி நகர் பகுதியில் 4 வீடு கள் சேதமடைந்தன. இதில், பாதிக்கப்பட்டவர்கள் மேல் பாரதி நகர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கன மழையால் ஏற்பட்டு வரும் மண் சரிவுகளை சீரமைக்க தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழு குன்னூர் வந்தடைந்துள்ளது. சென்னை பூந்தமல்லியில் இருந்து உதவி ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையில் 40 பேர் குன்னூர் வந்துள்ளனர். இவர்கள் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ் சாலையில் தங்கள் பணியை தொடங்கினர்.

தொடர் மழையால் அவலாஞ்சி மற்றும் அப்பர் பவானி அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், இரு அணைகளிலிருந்தும் தலா 500 கனஅடி நீர் நேற்று மதியம் வெளியேற்றப்பட்டது. இதனால், கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பு இடங்களுக்கு செல்லு மாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா அறிவுறுத்தினார்.

தென்மாவட்டங்கள்

இதேபோன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக் குடி மாவட்டங்களில் பெய்த கனமழையால் தாமிரபரணி உள் ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஏராளமான குடியிருப்புகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன.

அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக கடந்த 2 நாட்களாக இம்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 6 அடி உயர்ந்து, 125.70 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 140.78 அடியாகவும் உள்ளது. ராமநதி அணை முழு கொள்ளளவை எட்டிய தால் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால், தாமிர பரணி, நம்பியாறு, பச்சையாறு, குமரி மாவட்டம் பழையாறு, வள்ளியாறு, குழித்துறை தாமிர பரணியாறு ஆகியவற்றில் இரு கரை தொட்டு வெள்ளம் ஓடுகிறது. திருக்குறுங்குடி மலையில் உள்ள திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல நேற்று 2-வது நாளாக தடைவிதிக்கப்பட்டது. குற்றாலம் அருவிகளில் குளிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தூத்துக்குடி மற்றும் கன்னியா குமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 111 வீடுகளும், குமரி மாவட்டத்தில் 45 வீடுகளும் இடிந்து விழுந்தன. குளச்சல் அருகே வீடு இடிந்து பெண் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாநகரின் லூர்தம் மாள்புரம், கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் வெள்ளத்தை வடியவைக்கும் பணி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெறுகிறது. இப்பணிகளை தூத்துக்குடி எம்பி கனிமொழி, எம்எல்ஏ கீதாஜீவன் ஆகியோர் பார்வையிட்டனர்.

குமரி மாவட்டம் பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நாகர் கோவில் பறக்கின்கால், சுசீந்திரம், இறச்சகுளம் உள்ளிட்ட பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. கனமழை காரணமாக இம்மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி விட்டன. மீதமுள்ள குளங்களும் ஓரிரு நாட்களில் நிரம்பிவிடும். நேற்று மாலையில் மழை சற்று ஓய்ந்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x