

திருச்சி/ தஞ்சாவூர்
காவிரி மேலாண்மை ஆணையத் தின் தடையில்லா சான்று இல்லா மல் காவிரியின் குறுக்கே நடுத்தர அல்லது பெரிய நீர்த் தேக்கங் களைக் கட்ட மத்திய அரசின் நீர்வள அமைச்சகம் பரிசீலிக்காது என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவரும், மத்திய நீர்வளத் துறை செயலாளருமான நவீன் குமார் தெரிவித்தார்.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு வின் கூட்டம் திருச்சியில் உள்ள பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அலுவ லகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உறுப்பினர் செயலர் நீரஜ் குமார், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உதவி இயக்குநர் ராம்பால் சிங் மற்றும் தமிழ்நாட்டின் ஆர்.சுப்பிரமணியன், எல்.பட்டாபிராமன், கேரளத்தின் பி.ஜி.ஹரிகுமார், புதுச்சேரியின் எஸ்.மகாலிங்கம், எஸ்.சுரேஷ், கர்நாடகத்தின் கே.ஜெய்பிரகாஷ், எம்.பங்காரசுவாமி, ராமையா உள்ளிட்ட நீர்வள ஆதார அமைப் பின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் நவீன் குமார் கூறியதாவது: மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி கோரும் விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் ஏற் கெனவே விவாதிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத் தின் தடையில்லா சான்று இல்லா மல் மத்திய அரசின் நீர்வள அமைச் சகத்தின் ஆலோசனைக் குழு காவிரி ஆற்றின் குறுக்கே நடுத்தர அல்லது பெரிய நீர்தேக்கங்களை அமைப்பதை பரிசீலிக்காது என்றார்.
கர்நாடகம், உபரி நீரை திறந்து விட்டு, அதை தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கணக்கில் காட்டி விடு வதாக குற்றம்சாட்டப்படுவது குறித்து கேட்டபோது, "இதுகுறித்து தமிழ்நாடு அரசும் முறையிட்டுள்ளது. இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலித்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரை நியமிப்பதில் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். மத்திய நீர்வள அமைச்சகம் அதற் கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடக நீர்த் தேக்கங்களில் போதிய நீர் இருப்பு இல்லை. இதுதொடர்பாக காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. கர்நாடக அணைகளுக்கு வரும் நீர் வரத்தின் அடிப்படையிலேயே கர்நாடக அரசுக்கு நீர் திறப்பு குறித்து குழு அறிவுறுத்தல்களை வழங்கி வருகி றது" என்று நவீன் கூறினார்.
முன்னதாக, நவீன்குமார் தலை மையில் 4 மாநில பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள், காவிரி தொழில்நுட்பக் குழுவினர் என 16 பேர் கொண்ட குழுவினர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் ஆய்வு மேற்கொண்டனர்.