Published : 01 Nov 2019 08:38 AM
Last Updated : 01 Nov 2019 08:38 AM

வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்புக்காக ரூ.918 கோடியில் 26 மாவட்டங்களில் ஊரக புத்தாக்கத் திட்டம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் 26 ஊரக மாவட் டங்களில் வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு உருவாக்குதல் போன்ற வற்றுக்காக ரூ.918 கோடி மதிப்பில் ஊரக புத்தாக்கத் திட்டம் 6 ஆண்டுகளில் செயல்படுத்தப் படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ரூ.550 கோடியே 50 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.112 கோடியே 62 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ஊரக புத்தாக்கத் திட்டத்தில் 525 பேருக்கும், ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கருணை அடிப்படையில் 279 பேருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.150 கோடிக்கான வங்கிக் கடன் உதவிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது:

கிராமப் பகுதிகளில் வறுமை ஒழிப்பு செயல்பாட்டை தாண்டி வேலைவாய்ப்பை உருவாக்குதல், தொழில் மேம்பாடு, நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் ஆகிய நோக்கில் உலக வங்கி நிதியுடன் ரூ.918 கோடியே 20 லட்சத்தில் தமிழக ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் 26 மாவட்டங்களில் உள்ள 120 வட்டங்கள், 3,994 ஊராட்சிகளில் 2 கட்டங்களாக 6 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் ஆதி திராவிடர், பழங்குடியின பெண்கள், இளைஞர்கள், ஆர்வம் உள்ள தொழில் முனைவோர், வேளாண் சார்ந்த, சாராத குழுவினர் மிகுந்த பயன் அடைவார்கள். இதற்காக இந்த ஆண்டு ரூ.172 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பணியாற்ற மாவட்ட செயல் அலுவலர்கள், செயல் அலுவலர்கள், வட்டார அணி தலைவர்கள் என 525 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது.

18,600 பேருக்கு பணி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 1930-ல் தொடங்கப்பட்டது. 85 ஆண்டுகால வரலாற்றில் ஒரே ஆண்டில் 18,600 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுயஉதவிக் குழுக் களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன், அவர்கள் சொந்தக் காலில் நிற்க உதவியாக உள்ளது. இத்திட்டம் மூலம் கடந்த 2011 முதல் இதுவரை ரூ.57 ஆயிரத்து 876 கோடியே 78 லட்சம் கடன் வழங்கப்பட்டு, அவர்கள் பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். இது ரூ.50 ஆயிரம் கோடி என்ற இலக்கை தாண்டியுள்ளது. 2019-20 ஆண்டில் ரூ.12,500 கோடி வங்கிக் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.5,247 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்று ரூ.150 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் கூறி னார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என 4 முக்கிய அமைப்புகளைக் கொண்ட உள்ளாட்சி அமைப்பு களின் பரிணாம வளர்ச்சியில், தமிழகம் வேரூன்றி தழைத்து நிற்கிறது.

2011-ம் ஆண்டு முதல் இதுவரை 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய 12,524 ஊராட்சிகளில் ரூ.82 ஆயிரத்து 254 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள், சாலை வசதி, மழைநீர் வடிகால், தெரு விளக்கு, பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கான ஏராள மான திட்டப் பணிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. இந்த சாதனை களை பாராட்ட எதிர்க்கட்சிகளுக்கு மனம் வருவதில்லை. எல்லா பிரச்சினைகளையும் எதிர்க்கட்சி கள் தேர்தல் கண்ணோட்டம், அரசியல் லாபத்துடன் அணுகு கின்றன. தவறான பிரச்சாரம் செய் வதுடன்,பொய்யான வாக்குறுதி களையும் அளிக்கின்றன’’ என் றார்.

நிகழ்ச்சிக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் கே.சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ஹர்மந்தர் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x