பயன்படாத நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை தெரியப்படுத்த ‘விசில் ரிப்போர்ட்டர்’ செயலி: அதிமுக தொழில்நுட்ப பிரிவு அறிமுகப்படுத்தியது

பயன்படாத நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை தெரியப்படுத்த ‘விசில் ரிப்போர்ட்டர்’ செயலி: அதிமுக தொழில்நுட்ப பிரிவு அறிமுகப்படுத்தியது
Updated on
1 min read

சென்னை

பயன்படாத நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் குறித்து தெரிவிக்க ‘விசில் ரிப்போர்ட்டர்’ என்ற செயலியை அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவு அறிமுகப் படுத்தியுள்ளது.

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் கவனிப்பின்றி கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்து இறந்த சம்பவத்தை அடுத்து, இதுபோன்ற சம்பவம் இனி ஏற்படாமல் இருக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. அதன்படி, பயன்படாமல் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு நிலைகளாக மாற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தனது பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

‘ப்ளே ஸ்டோர்’ மூலம் பதிவிறக்கம்

இந்நிலையில், அபாய நிலையிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து மூடுவதற்கு ‘விசில் ரிப்போர்ட்டர்’ என்ற புதிய செயலியை அதிமுகவின் தொழில் நுட்பப் பிரிவு உருவாக்கியுள்ளது. இந்த செயலியை செல்போனில் ‘ப்ளே ஸ்டோர்’ மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் அவரவர் விவரங்களை கொடுத்து லாகின் செய்துகொண்டு, நமக்கு தெரியவரும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறு பற்றிய விவரங்களை இதில் தெரியப்படுத்தலாம். அல்லது, பயன்படாத கிணற்றின் அருகில் நின்று கொண்டு, செயலியின் வலதுபுறத்தில் கீழே இருக்கும் பச்சை நிற பட்டனை அழுத்தினால், புகைப்படம் மற்றும் அந்த ஆழ்துளை கிணறு இருக் கும் இடம் பற்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு குழுவுக்கு சென்றுவிடும்.

2 நாட்களில் 800-க்கும் அதிகமானோர்

பிறகு அந்த இடத்தை கண்டறிந்து ஆழ்துளைக் கிணற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயலி பற்றிய விவரங்களை அமைச்சர் விஜயபாஸ்கரும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் ராமச்சந்திரன் கூறிய தாவது:

‘விசில் ரிப்போர்ட்டர்’ செயலி அறிமுகப் படுத்திய 2 நாட்களிலேயே 800-க்கும் அதிகமானோர் ஆழ்துளைக் கிணறுகள் குறித்த தகவல்களை செயலியில் பதிவு செய்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்தவர் களை போன் மூலம் தொடர்பு கொண்டு, அந்த ஆழ்துளைக் கிணறு குறித்த முழு விவரங்களை தெரிந்து கொண்டோம். பின்னர் அப்பகுதியில் இருக்கும் அதிமுக வினர் மூலம் அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் வழிகாட்டுதல்படி...

இதுவரை எத்தனை ஆழ்துளை கிணறு கள் மூடப்பட்டன என்பது குறித்த விவ ரங்களை சில நாட்களில் தெரிவிப்போம். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டு தல்படி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in