

சென்னை
டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வருவதால் அரசு டாக்டர் களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தக் கோரியும், டெங்கு வால் உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும் வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் அவர் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், ‘‘தமிழ கத்தில் டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி மர்ம காய்ச்சலும் தீவிரமாக பரவி வருகிறது. காய்ச்சலினால் குழந்தை கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வரு கின்றனர். இதில் 90 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளை நம்பியே உள்ளனர். ஆனால் அரசு டாக்டர்கள் தற்போது ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இது தமிழக அரசும், அரசு டாக்டர்களும் நோயாளி களின் உயிருடன் விளையாடுவது போல் உள்ளது. எனவே அரசு மருத்து வர்களின் இந்த போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மனுதாரரான வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார். அப்போது இன்றுகூட (நேற்று) சிகிச்சை பலனின்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு இளம்பெண் பரிதாபமாக இறந்துள்ளார். எனவே இந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்’ என கோரினார். அதையடுத்து நீதிபதிகள், இந்த மனு நாளை (இன்று) விசாரிக்கப்படும், என தெரிவித்தனர்.