Published : 31 Oct 2019 07:36 PM
Last Updated : 31 Oct 2019 07:36 PM

டிஜிபி காந்திராஜன் ஓய்வு: தமிழகத்தில் டிஜிபிக்கள் எண்ணிக்கை 10 ஆக குறைந்தது

சென்னை

தீயணைப்புத்துறை டிஜிபி காந்திராஜன் ஓய்வு பெற்றதை அடுத்து தமிழகத்தில் டிஜிபிக்கள் எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது.

தமிழக டிஜிபிக்கள் விபரம்:

தமிழகத்திற்கு 6 டிஜிபிக்கள் அனுமதி உண்டு. ஆனால் இம்முறை பலருக்கும் பதவி உயர்வு தாமதமானதால் அரசு சிறப்பு அனுமதி வாங்கி கூடுதலாக பலரையும் டிஜிபியாக பதவி உயர்த்தியது. 11 டிஜிபிக்கள் வரை தமிழகத்துக்கு டிஜிபிக்கள் இருந்தனர். இதில் முதன்மைப் பதவி சட்டம் ஒழுங்கு டிஜிபி. இது தவிர தீயணைப்புத்துறை, ரயில்வே, சிபிசிஐடி, சிறைத்துறை, மண்டபம் அகதிகள் முகாம், போக்குவரத்துக்கழகம், காவலர் பயிற்சி கல்லூரி, உணவுகடத்தல் தடுப்புப்பிரிவு, மின்வாரிய விஜிலென்ஸ், மாநில மனித உரிமை ஆணையம் என பல டிஜிபிக்கள் உள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஓய்வுப்பெற்றதை அடுத்து ஜே.கே.திரிபாதி சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அவர் 2021 ஜுன் மாத இறுதிவரை பதவியில் இருப்பார். சட்டம் ஒழுங்கு டிஜிபி தவிர மேலும் 9 டிஜிபிக்கள் பதவியில் உள்ளனர்.

அவர்கள் வகிக்கும் பதவி ஓய்வுபெறும் ஆண்டு விபரம்:

1. ஜெ.கே.திரிபாதி டிஜிபி - சட்டம் ஒழுங்கு (1985 பேட்ச்) ஜூன் 2021 ஓய்வு

2. ஜாஃபர் சேட் டிஜிபி - சிபிசிஐடி (1986 பேட்ச்) டிசம்பர் 2020-ல் ஓய்வு

3. லட்சுமி பிரசாத் - டிஜிபி - மாநில மனித உரிமை ஆணையம் (1986 பேட்ச்) மே 2020-ல் ஓய்வு

4. அசுதோஷ் சுக்லா - டிஜிபி - ராமநாதபுரம் அகதிகள் முகாம் (1986 பேட்ச்) ஜனவரி -2021-ல் ஓய்வு

5. மிதிலேஷ்குமார் ஜா - டிஜிபி - அயல்பணியில் இருக்கிறார் (1986 பேட்ச்) ஜூலை -2021-ல் ஓய்வு

6. தமிழ்செல்வன் - டிஜிபி - மின்வாரிய விஜிலென்ஸ் (1986 பேட்ச்) மே-2021-ல் ஓய்வு

7. சைலேந்திர பாபு - டிஜிபி - ரயில்வே (தீயணைப்புத்துறை) (1987 பேட்ச்) ஜூன் 2022-ல் ஓய்வு

8. கரன்சின்ஹா - டிஜிபி - காவலர் பயிற்சிக் கல்லூரி (1987 பேட்ச் ) பிப்ரவரி 2022

9. பிரதீப் வி பிலிப் - டிஜிபி - உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு (1987 பேட்ச் ) செப்-2021 -ல் ஓய்வு

10. விஜயகுமார் - டிஜிபி - லஞ்ச ஒழிப்புத்துறை (1987-பேட்ச்) செப் 2020-ல் ஓய்வு

இவர்களுடன் 1987-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் வரிசை முடிகிறது. இதற்கு கீழே 1988 பேட்ச் ஏடிஜிபிக்களில் சஞ்சய் அரோரா அவரைத் தொடர்ந்து 7 ஏடிஜிபிக்கள் அதே ஆண்டில் வரிசையாக உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x