தீயணைப்புத்துறை டிஜிபி காந்திராஜன் ஓய்வு;  சைலேந்திரபாபுவுக்கு கூடுதல் பொறுப்பு

தீயணைப்புத்துறை டிஜிபி காந்திராஜன் ஓய்வு;  சைலேந்திரபாபுவுக்கு கூடுதல் பொறுப்பு
Updated on
1 min read

சென்னை

தீயணைப்புத்துறை டிஜிபி காந்திராஜன் ஓய்வுப்பெற்றதை அடுத்து தீயணைப்புத்துறை டிஜிபி பொறுப்பு கூடுதலாக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பதவி ஓய்வுப்பெற்ற டிஜிபிக்கள்:

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் கே.பி.மகேந்திரன் ஓய்வுப்பெற்றார். அதன்பின்னர் ஆஷிஸ் பங்க்ரா, ஆர்.சி.கொட்வாலா இருவரும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஓய்வுப்பெற்றனர். பின்னர் ஆகஸ்டு மாதம் ஜாங்கிட் ஓய்வுப்பெற்றார். அதன் பின்னர் தீயணைப்புத்துறை டிஜிபியாக பதவி வகிக்கும் காந்திராஜன் இன்று ஓய்வு பெற்றார். சென்னை ராஜரத்தினம் போலீஸ் மைதானத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.

காந்திராஜன் ஓய்வை அடுத்து 11 டிஜிபிக்கள் எண்ணிக்கை தற்போது 10 ஆக குறைந்துள்ளது. காந்திராஜன் ஓய்வுப்பெற்றதை அடுத்து அவர் வகித்துவந்த தீயணைப்புத்துறை டிஜிபி பொறுப்பை ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு கூடுதலாக கவனிப்பார் என்று உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவின் மூலம் தெரிவித்துள்ளார்.

நாளை ஐபிஎஸ் இடமாற்றம் வர உள்ள நிலையில் தீயணைப்புத்துறைக்கு புதிதாக டிஜிபி நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in