கட்டிட விதிமீறல்களுக்கு புதிய இலவச உதவி எண்: சென்னை மாநகராட்சி அறிமுகம்

கட்டிட விதிமீறல்களுக்கு புதிய இலவச உதவி எண்: சென்னை மாநகராட்சி அறிமுகம்
Updated on
1 min read

கட்டிட விதிமீறல்கள் குறித்த புகார்களை அளிக்க புதிய இலவச உதவி எண்ணை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட் டிடங்கள், அனுமதி இல்லாமல் கட்டப் பட்டுள்ள கட்டிடங்கள் உள்ளிட்டவை குறித்து 1800-425-1914 என்ற இலவச உதவி எண்ணில் பொதுமக்கள் புகார்கள் அளிக்கலாம்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) இந்த மாத தொடக்கத்தில் கட்டிட விதிமீறல்கள் குறித்த புகார்களை அளிக்க பிரத்யேக இலவச உதவி எண்ணை (1800-425- 6099) அறிமுகப்படுத் தியது.

இந்த எண்களில் பெறப் படும் புகார்கள் மீது தமிழ் நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம் 1971-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு கட்டிடங்கள், 4 தளங்களுக்கு மேல் உள்ள கட்டிடங்கள் குறித்து இந்த உதவி எண்களில் பெறப்படும் புகார்கள் மீது சி.எம்.டி.ஏ. நடவடிக்கை எடுக்கும். மற்ற புகார்கள் மீது சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்.

இந்த இலவச உதவி எண் கள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பொது மக்களுக்காக அறிமுகப்படுத் தப்பட்டுள்ளன. சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் விதிமீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ’டிராஃபிக்’ ராமசாமி வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் விதிமீறிய கட்டிடங்களை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை நியமித்தது.

அந்தக் குழுவின் பரிந்துரை களை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் விதிகளை மீறிய கட்டிடங்கள் குறித்து புகார் அளிக்க இலவச உதவி எண்ணை அறிமுகப் படுத்தி அதை விளம்பரப்படுத்த வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தெரிவிக்கும்போது, “உயர் நீதிமன்ற உத்தரவின்படி புதிய உதவி எண் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அனைத்து செல்பேசி நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் இதில் இலவசமாக தொடர்பு கொள் ளலாம். சென்னையில் தெரு விளக்குகள், குப்பை, கொசுத் தொல்லை உள்ளிட்டவை குறித்து புகார்கள் அளிக்க செயல்பட்டு வரும் 1913 என்ற உதவி எண் எப்போதும் போல இயங்கும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in