திருமுடிவாக்கம் செல்லும் சாலையில் அடையாறு ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் கனமழையால் அடித்து செல்லப்பட்டது

திருமுடிவாக்கம் செல்லும் சாலையில் அடையாறு ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் கனமழையால் அடித்து செல்லப்பட்டது
Updated on
2 min read

பல்லாவரம்

குரோம்பேட்டையில் இருந்து திரு முடிவாக்கம் செல்லும் சாலையில் அடையாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்காக அமைக்கப் பட்ட தற்காலிக பாலம் கனமழை காரணமாக அடித்து செல்லப்பட்ட தால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுப் பதற்காக அடையாறு ஆற்றின் குறுக்கே இருந்த பழைய குறுக லான பாலங்களை இடித்து விட்டு, புதிய பாலம் கட்ட முடிவு செய்யப் பட்டது. அதன்படி அடையாறு ஆற் றின் குறுக்கே ஆதனூர் சாலை, மணிமங்கலம் சாலை, தாம்பரம்-சோமங்கலம் சாலை, திருநீர்மலை-திருமுடிவாக்கம் சாலை ஆகியவற் றில் உள்ள குறுகலான பாலங்களை இடித்து விட்டு ரூ.10 கோடியே 48 லட்சத்தில் புதிய பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக பழைய பாலங்கள் இடிக்கப்பட்ட இடத் தின் அருகே வாகன போக்கு வரத்துக்காக அடையாறு ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஆற்றில் தண்ணீர் தடை இன்றி செல்வதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டு, அதன் மீது தற் காலிக சாலை போடப்பட்டது. இத னிடையே ஆதனூர் சாலை, மணி மங்கலம் சாலை, தாம்பரம்-சோமங் கலம் சாலை போன்ற இடங்களில் பணிகள் நிறைவுற்று போக்கு வரத்துக்கு திறந்துவிடப்பட்டன.

இந்து தமிழ்’ செய்தி

இதில் திருநீர்மலை-திருமுடி வாக்கம் சாலையில் மட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த பாலத்தின் சீரமைப்புப் பணி ஆமை வேகத்தில் நடைபெறு கிறது என ‘இந்து தமிழ்’ நாளிதழில் ஏற்கெனவே படத்துடன் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில நாட்க ளாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடையாறு ஆற்றில் அதிகளவில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் திருநீர்மலை-திருமுடி வாக்கம் சாலையில் திருநீர்மலை யில் அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலம் மழைநீரில் அடித் துச் செல்லப்பட்டது. அதனால் அந்த சாலையில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது.

திருமுடிவாக்கம் செல்லும் வாகனங் கள் தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலை, சர்வீஸ் சாலை வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப் பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக் குள்ளாயினர். இந்நிலையில் மழை நீரால் அடித்து செல்லப்பட்ட தற் காலிக பாலத்தை சீரமைக்கும் பணியில் பெரும்புதூர் நெடுஞ் சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆட்சியர் விளக்கம்

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை விட்டுவிட்டு பெய்து கொண் டிருக்கிறது. எந்த இடத்திலும் சாலை துண்டிப்பு இல்லை. திருநீர்மலை அருகில் தரைப்பாலம் துண்டிப்பு என செய்திகள் வந்தன. ஆனால் அது தரைப்பாலம் இல்லை. அங்கு ஏற்கெனவே அடையாறு ஆறு செல் லும் வழியில் சிறு பாலம் இருந்தது. அங்கு அடையாறு ஆற்றை அகலப் படுத்துவதற்காக புதிய பாலம் கட்டி வருகிறோம்.

அந்த பாலத்தை கட்டுவதால், வாகனங்கள் செல்ல ஏதுவாக தற் காலிக பாலம் அமைக்கப்பட்டிருந் தது. அது தற்போது ஆற்றில் நீர் அதிகமாக வருவதால் அடித்துச் செல்லப்பட்டது. போக்குவரத்து பாதிக்காமல் இருக்க, மாற்று வழியாக அப்பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள தாம்பரம் - சோமங்கலம் சாலையில் ஏற்கெனவே கட்டி முடிக்கப் பட்டு பயன்பாட்டிலுள்ள பாலம் வழியாக செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளது. மழை குறைந்து, நீரின் அளவு குறைந்த பின்னர் மாற்று பாலம் சரி செய்யப்படும். இவ்வாறு காஞ்சி ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார். இது போலவே அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பொழிச்சலூரில் உள்ள தரைப் பாலமும் மூழ்கியது.

சென்னையில்..

தொடர் மழை காரணமாக சென்னையில் நேற்று 30 இடங் களில் மழைநீர் தேங்கியது. திரு வொற்றியூரில் உள்ள மணலி விரைவு சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதனால் போக்குவரத்து கடுமை யாக பாதிக்கப்பட்டது. நீரை வெளியேற்றும் பணியில் மாநக ராட்சி அதிகாரிகள் தொடர்ந்து ஈடு பட்டு வருகின்றனர். மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 27 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டதாக மாநக ராட்சி அதிகாரிகள் கூறினர். இரு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அண்ணா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட சாலைகள் கடுமை யாக சேதமடைந்திருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in